TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு தொற்று : Omicron சிறப்பு வார்டில் அனுமதி – மருத்துவமனை டீன் சொல்வதென்ன?

உலகளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்றுக்கு எப்பொழுது முடிவு வரும் என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருந்துவரும் நிலையில் டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று புதிய புதிய உருவங்களில் தொடர்ந்து இந்த நோய் தொற்று நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வரிசையில் தற்பொழுது Omicron என்ற புதிய மாறுபாடு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : VTL நிபந்தனைகளில் மாற்றம் – Detailed Report

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் இந்த வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் எல்லைகளை அதிக கவனத்துடன் கண்காணித்து வருகின்றன. ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பெருந்தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள Omicron சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்கள் கூறுகையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி அந்த பயணிக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. அவருடைய சளி மாதிரிகள் தற்போது சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது Omicronனுக்கு என்று சிறப்பாக அமைக்கப்பட்ட வார்டில் கண்காணிப்பில் இருக்கின்றார். முதல்வர் மற்றும் மருத்துவ துறை அமைச்சர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சியில் தற்போது 32 படுக்கைகள் கொண்ட Omicron சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

மக்கள் தயவு செய்து தேவையின்றி வெளியில் செல்வதை குறைத்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts