TamilSaaga

“புகழ்பெற்ற சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலயம்” – சில ஆச்சர்யமூட்டும் வரலாற்று தகவல்கள்

சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple) இந்த ஆலயமானது நம்பர் 19, Ceylon Road – சிங்கப்பூரில் அமைந்துள்ளது. ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயமானது 1850 களில் ஒரு சிறிய சன்னதியாக தொற்றத்தை கொண்டிருந்தது. செண்பக மரம் என தமிழில் சொல்லப்படும் ஒரு மரத்தின் அடியில் ஆற்றில் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தமிழ் சினிமாவின் “கருப்பு நட்சத்திரம்” ரஜினிகாந்த்!

சிங்கப்பூரில் உள்ள மிகப்பழமையான இந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டு சேதமடைந்த இந்த கோயிலானது பின்பு 1948ல் புணரமைக்கப்பட்டது. இலங்கை தமிழர் திரு.எதிர்நாயகம் பிள்ளை அவர்களின் உதவியுடன் இந்திய கட்டுமான கலைஞர்களை கொண்டு இந்த கோயில் கட்டப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தய காலத்தில் வளர்ந்து வந்த தமிழ் சமூகம் சிலோன் தமிழர் சங்கத்தை (SCTA) உருவாக்க முயற்சிகள் செய்தது. அப்போது இந்த கோயிலானது அந்த சங்கத்தால் நிர்வாகிக்கப்பட்டு விரிவடைந்தது. 1990 பிற்பகுதி வரையில் அந்த சங்கத்தின் பார்வையில் இந்த கோயில் இருந்தது.

இந்த கோயிலின் முக்கிய சிறப்பாக இங்கு உள்ள 4 தூண்களில் 32 வடிவிலான விநாயகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுமார் 21 மீட்டர் இராஜ கோபுரமானது பக்தர்களை வரவேற்கிறது. 20க்கும் மேற்பட்ட இந்தியக் கட்டட கலைஞர்கள் இணைந்து 20 வருடங்கள் செலவிட்டு இந்த ஆலயத்தை செதுக்கியதாக வரலாறு கூறுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts