சிங்கப்பூரில் கடந்த ஆண்டு VTL சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. ஆனால் இந்த சேவையிலும் குறைந்த பட்சமான பயணிகளே சிங்கப்பூர் வர நமது அரசு அனுமதி அளித்து வருகின்றது. ஆனால் நிச்சயம் இந்த அளவு தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள் கடந்த சில மாதத்தில் தொடர்ச்சியாக விமான சேவை நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருச்சி சிங்கப்பூர் இடையே குறிப்பிட்ட வகை பாஸ் வைத்திருப்பவர்களுக்கு Entry Approval இல்லாத சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வரும் நிலையில் திருச்சி மற்றும் சிங்கப்பூர் என்று இருமார்கங்களாக தனது சேவை நேரத்தை மாற்றியமைத்துள்ளது Indigo விமான சேவை நிறுவனம். இதுகுறித்து நமது தமிழ் சாகா செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்கள் பின்வருமாறு..
திருச்சி – சிங்கப்பூர் Indigo சேவை
இன்று பிப்ரவரி 25 2022 துவங்கி 26 March 2022 (ஒரு மாத காலம்) நள்ளிரவு 12.15 AMக்கு அங்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு இங்கு சிங்கப்பூருக்கு காலை 7 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் பயணிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று indigo தெரிவித்துள்ளது.
அதேபோல 27 March 2022 துவங்கி 31 டிசம்பர் 2022 வரை திருச்சி – சிங்கப்பூர் சேவை மாலை 6.50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இங்கு சிங்கப்பூருக்கு அதிகாலை 1.45 AM மணிக்கு வந்திறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் “வாழைப்பழங்களின் ராஜா” காலமானார் : வருத்தத்தில் வாடிக்கையாளர்கள் – இக்கட்டான நிலையில் தாய் முன்வைத்த கோரிக்கை!
சிங்கப்பூர் – திருச்சி Indigo சேவை
அதேபோல 25 பிப்ரவரி 2022 துவங்கி 31 டிசம்பர் 2022 வரை சிங்கப்பூர் – திருச்சி சேவை காலை 5.30 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இங்கு சிங்கப்பூருக்கு காலை 7.00 AM மணிக்கு வந்திறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600223091