TamilSaaga

சிங்கப்பூரின் “வாழைப்பழங்களின் ராஜா” காலமானார் : வருத்தத்தில் வாடிக்கையாளர்கள் – இக்கட்டான நிலையில் தாய் முன்வைத்த கோரிக்கை!

சிங்கப்பூரில் வசிக்கும் நீங்கள் சாங்கி village பகுதியில் உள்ள Hawker மையத்திற்கு அடிக்கடி வருபவர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு “Million Star Fried Banana” கடையை தெரிந்திருக்கும். அந்த ஹாக்கர் மையத்தின் முக்கிய அம்சம், வாழைப்பழங்களின் ராஜா என்றும் அழைக்கப்படும் “பிசாங் ராஜா” தான். வறுத்த வாழைப்பழங்களை பயன்படுத்தி பஜ்ஜிகளை விற்பனை செய்வதில் அவர் மிகவும் பிரபலம். சிங்கப்பூரில் செயல்பட்டு சீன செய்தித்தாள் ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, அந்த ஸ்டாலின் இரண்டாம் தலைமுறை உரிமையாளர் ஜேம்ஸ் சான் கடந்த பிப்ரவரி 21 அன்று காலமானார் என்ற மிகவும் சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

“சிங்கப்பூர் BTO திட்டம்” : பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து – Fork Liftல் இருந்து தூக்கி வீசப்பட்ட “வெளிநாட்டு தொழிலாளி” மரணம்

அவருக்கு வயது 49, அவருடைய இறப்புக்கான காரணம் மாரடைப்பு என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சானின் தாயார் ஊடகத்திடம் பேசும்போது “சான் இறந்த அன்று காலை 11 மணியளவில் படுக்கையில் இருப்பதைக் கவனித்ததாகக் கூறினார்”. மேலும் சான் வழக்கமாக காலை 10:30 மணிக்கு ஸ்டாலைத் திறக்க வீட்டை விட்டு வெளியேறுவார்” என்றும் அவர் கூறினார். அந்த தாய் சானை எழுப்ப முயன்றபோது, ​​அவருடைய கை குளிர்ச்சியாகவும் விறைப்பாகவும் இருப்பதைக் கண்ட அவர் அதிர்ந்துபோய் அவசரமாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர் குழு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தபோது, ​​தான் மனம் உடைந்ததாகவும் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். சானின் உடல்நிலை குறித்து கேட்டபோது, ​​தனது மகன் எந்த நோயை குறித்து தன்னிடம் குறிப்பிடவில்லை என்றும், அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் கூறினார். சான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலில் உள்ள தனது பெற்றோருக்கு உதவத் தொடங்கினார். இறுதியில் தனது வயதான பெற்றோரிடமிருந்து வணிகத்தை எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளார். இந்த சூழலில் தற்போதைக்கு சானின் தந்தை தொழிலைத் தொடர்வார் என்று உறவினர் ஒருவர் பதிலளித்தார்.

“இந்தோனேசியாவில் நிலநடுக்கம்” : சிங்கப்பூரிலும் பல இடங்களில் உணரப்பட்ட அதிர்வு – எச்சரிக்கும் SCDF மற்றும் SPF

சானின் நட்புரீதியான சேவையை அவரது வாடிக்கையாளர்கள் தற்போது அன்புடன் நினைவுகூருகிறார்கள். Hawkers United Daboa 2020என்ற Facebook குழு தொற்று காலத்தில் Hawker மைய வியாபாரிகளுக்காக துவங்கப்பட்டது. அதன் நிர்வாகியான Melvin Chew, குழுவில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்ட சானை நினைவு கூர்ந்தார். வறுத்த வாழைப்பழ வணிகம் மேம்படுத்த அவர் முயற்சிகளை மேற்கொண்டார் என்று புகழாரம் சூட்டினார். சானின் தாயார் ஊடகங்களிடம் பேசும்போது “தங்களின் இந்த வணிகத்தை எடுத்துக்கொள்ள விரும்பும் எந்தவொரு ஆர்வமுள்ள தரப்பினரும் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts