விமான பயணத்தில், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் விமான பயணிகளுக்கு மிகப்பெரிய சவாலான ஒன்றாக உள்ளது “Baggage” தான் என்றால் அது மிகையல்ல. பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை தேவையான அளவில் பிற நாடுகளில் இருந்து சொந்த ஊர் கொண்டுசெல்வதில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக பிற நாடுகளுக்கு சென்று வேலைசெய்து சொந்த நாட்டுக்கு திரும்பும் தொழிலாளர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச்செல்ல நினைக்கின்றனர். ஆனால் அதை எளிதில் செய்ய அவர்களால் முடிவதில்லை.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர், மலேசியா : விரைவில் தொடங்குகிறது இருவழி நில VTL சேவை
இந்நிலையில் இதற்கான ஒரு தீர்வை தற்போது கொண்டுவந்துள்ளது Indigo விமான சேவை நிறுவனம். குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு மிகப்பெரிய வசதி ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக 20 கிலோ baggage மற்றும் 7 கிலோ Hand Baggage மட்டுமே பொதுவாக அனுமதிக்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு கிலோவிற்கும் விமானநிலையத்தை பொறுத்து கொண்டுசெல்லும் Baggage-க்கான விலை மாறும்.
ஆனால் தற்போது Indigo நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய வசதியில் 20 + 7 கிலோ Baggage மட்டுமில்லாமல் 5 கிலோ, 10 கிலோ, 15 கிலோ மற்றும் 20 கிலோ என்று 40 கிலோ வரை பயணிகள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கூடுதலாக 5 கிலோவிற்கு 20 வெள்ளியும், 10 கிலோவிற்கு 40 வெள்ளியும், 15 கிலோவிற்கு 356 வெள்ளியும் மேலும் 20 கிலோவிற்கும் 100 வெள்ளியும் வசூல் செய்யப்படுகிறது.
Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி – 9600223091
மேலும் பயணிகள் கொண்டுவரும் Baggageகளின் எண்ணிக்கையிலும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது Indigo நிறுவனம். இதன்படி 2 Baggageகளுக்கு (தனிநபர்) மேல் கொண்டுவருபவர்களுக்கு ஒரு Baggageக்கு 27 வெள்ளி செலுத்த வேண்டும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.