TamilSaaga

“என்னோட பிள்ளைகளுக்காக இப்படி பண்ணேன்” : நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் – சிங்கப்பூரில் “இந்திய பெண்ணுக்கு” சிறை

சிங்கப்பூரில் தொற்று ஆதரவு மாநிலத்திலிருந்து பணத்தை பெறும் நோக்கத்தோடு தான் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாக போலியான ஆவணத்தை தயாரித்து வழங்கிய இந்திய பெண் ஒருவர் தற்போது சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : 1000 இலவச சினோபார்ம் தடுப்பூசி வழங்க திட்டம்

கைது செய்யப்பட்ட 48 வயதாகும் ராஜகோபால் மாலினி என்ற அந்தப் பெண் அவர் வேலை பார்த்துவந்த கூட்டுரிமை வீட்டுக்குடியிருப்பாளர்கள் அந்த சங்கத்தின் சார்பாக பராமரிப்புக்காக அந்த பெண்ணிடம் அளித்த பணத்தை அவர் கையாடல் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் திருடிய கடன் அட்டையை கொண்டு அவர் தனது நணபர்கள் மற்றும் குழந்தையுடன் பல கடைகளில் பொருட்கள் வாங்கியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அவர் சுமத்தப்பட்ட சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மாலினிக்கு தற்போது 16 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுரிமை வீட்டுக்குடியிருப்பாளர்கள் சங்கத்தில் இருந்து சுமார் 3500 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை அவர் கையாடல் செய்துள்ளார் என்றும். மேலும் கடன் அட்டை மூலம் அவர் 10000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை அவர் கையாடல் செய்துள்ளார்.

ஏழ்மையில் இருக்கும் மாலினி தனது பிள்ளைகளுக்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts