TamilSaaga

“இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன்” : மீண்டும் ஒத்திவைக்கப்படும் மரணதண்டனை – ஐவர் கொண்ட நீதிபதி குழு முடிவு

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரணதண்டனையை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை (மார்ச் 1) காலை விசாரிக்கப்பட்ட மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்ததால், அவரது மரணதண்டனை மீண்டும் தாமதமாகியுள்ளது. 34 வயதான நாகேந்திரன், தலையை மொட்டையடித்து, ஊதா நிற சிறைச்சாலையில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வேட்டி கட்டி விமானத்தை இயக்கிய ஒரே “தமிழன்” – வியந்து நின்று அண்ணாந்து பார்த்த அமெரிக்கா!

நாகேந்திரன் வழக்கை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி ஆண்ட்ரூ பாங், நீதிபதி ஜூடித் பிரகாஷ், நீதிபதி பெலிண்டா ஆங் மற்றும் நீதிபதி சாவோ ஹிக் டின் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. “நாங்கள் தீர்ப்பை தற்போது ஒதுக்கி வைக்கின்றோம்” என்று தலைமை நீதிபதி மேனன், சுமார் ஒரு மணி நேர விசாரணையை முடிப்பதற்கு முன் கூறினார். தீர்ப்பு எப்போது நிறைவேற்றப்படும் என்று அவர் தெளிவுபடுத்தாத நிலையில், துணை அரசு வழக்கறிஞர் (DPP) வோங் வூன் குவாங் விசாரணைக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நாகேந்திரன் சார்பில் தற்போது வழக்கறிஞர் வயலட் நெட்டோ ஆஜரானார், அவரது முந்தைய சட்ட ஆலோசகர் எம். ரவியும் “தொழில்நுட்ப ஆதரவை வழங்க” வருகை தந்தார் என்று நெட்டோ நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். ரவி தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார் என்றும், மேலும் அவர் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் நெட்டோவுக்கு உதவுவதாக விசாரணைக்கு முன்னதாக ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டோவின் வாதங்களின் முக்கிய பகுதி, நாகேந்திரன் மரணதண்டனைக்கு தகுதியற்றவர் என்பதாகும். நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என்ற வாதத்தை நெட்டோ முன்வைத்து, “நிபுணர்களின்” மூன்று அறிக்கைகளை சமர்ப்பிப்பதன் மூலம் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தினார். அவற்றில் இரண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் சல்லிவன் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஷாப்வெல்ட் ஆகியோரின் அறிக்கைகள் என்பது அவரின் வாதம்.

சிங்கப்பூரில் வேலைக்கு சேர பணம் கேட்கும் “முதலாளிகள்”.. வெளிநாட்டு ஊழியர்களின் இயலாமையை காசாக்கும் அவலம்! – “Kickback” குறித்து MOM அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 2010ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 42.72 கிராம் ஹெராயின் இறக்குமதி செய்ததற்காக 2010 நவம்பரில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி அவர் தூக்கிலிடப்படுவார் என்று முன்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts