TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வீட்டு பணியாளர்களுக்கான தேவை.. நிரந்தரமாகும் பகுதி நேர சேவை – MOM அறிவிப்பு

சிங்கப்புரில் பகுதிநேர விட்டுச் சேவைக்கான திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதியிலிருந்து நிரந்தரமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் துப்புரவு பணிகளை செய்யும் வேலைக்கும் மேலும் இது போன்றவையம் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேவை உள்ள முதலாளிகள் இந்த பகுதி நேர வீட்டு துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் இது போன்ற வீட்டு சேவைக்கான பணிகளின் தேவை அதிகரித்துள்ளதால் அதனை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்த வீட்டு சேவைத் திட்டமானது கடந்த 2017ஆம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆரம்பகட்டத்தில் முதலில் ஏறத்தாழ 15 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்தன. தற்போது 76 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளது.

இந்த 76 நிறுவனங்களும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த பணிக்கான தங்கள் சேவைகளை வழங்குகி வருகின்றன. இல்லத்திற்கான துப்புரவுப் பணிகல் செய்தல், மளிகைப் பொருட்களை வாங்க உதவி செய்வது, வாகனங்களைக் கழுவி சுத்தம் செய்வது மற்றும் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது போன்ற பபல்வேறு பணி சேவைகளை வழங்க இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Related posts