TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் Domestic Workers.. 6 மாத மருத்துவப் பரிசோதனை ஒத்திவைப்பு – MOM-ன் திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்று வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிற பெண் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கான ஆறு மாத மருத்துவப் பரிசோதனை ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார வழங்குநர்கள், குறிப்பாக பொது பயிற்சியாளர்கள் கிளினிக்குகள் மற்றும் பாலிகிளினிக்குகள் எதிர்கொள்ளும் நோயாளிகளின் சுமை மற்றும் அழுத்தத்தைக் குறைக்கும் என்று மனிதவள அமைச்சகம் இன்று புதன்கிழமை (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலைக்கு சேர பணம் கேட்கும் “முதலாளிகள்”.. வெளிநாட்டு ஊழியர்களின் இயலாமையை காசாக்கும் அவலம்! – “Kickback” குறித்து MOM அதிரடி அறிவிப்பு

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நோட்டீஸ்களைப் பெற்ற, ஆனால் தங்கள் ஊழியர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள், எதிர்வரும் ஏப்ரல் 30 வரை பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். இதற்கிடையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொழிலாளர்களின் பரிசோதனை அறிவிப்புகளைப் பெற வேண்டிய முதலாளிகளுக்கு ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும்.

மேலும் மருத்துவ பரிசோதனைக்காக தங்கள் தொழிலாளர்களை கிளினிக்குகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள முதலாளிகள் நிச்சயம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. “இருப்பினும், மருத்துவ கவனிப்பு தேவைப்படாவிட்டால் வருகையை ஒத்திவைக்க முதலாளிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றும் அமைச்சகம் மேலும் கூறியது. சிங்கப்பூரில் தற்போதுள்ள தொற்றின் எழுச்சியை எதிர்கொள்ள ஆறு பாலிகிளினிக்குகள் தங்கள் வழக்கமான இயக்க நேரத்தை நீடித்துள்ளதால் இந்த நடவடிக்கை அமலாகியுள்ளது.

பிப்ரவரி 26 முதல் இரண்டு வாரங்களுக்கு பாலிகிளினிக்குகள் சனிக்கிழமை பிற்பகல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நோயாளிகளை வரவேற்கும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. பட்டியலிடப்பட்ட அந்த பாலிகிளினிக்குகள் புக்கிட் பஞ்சாங், யூனோஸ், கல்லாங், பயோனியர், புங்கோல் மற்றும் உட்லண்ட்ஸ் ஆகிவையாகும். சுமார் 170 பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்குகள் (PHPCs) நோயாளிகளின் சுமையை விரிவுபடுத்துவதற்கு இயக்க நேரத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யே குங் முன்னதாக அறிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் ‘இன்டர்நெட் காதல் மோசடி’.. மாறி மாறி “ஏமாந்த” பெண்கள் – சிக்கிய “Shaahi” உணவகத்தின் இயக்குநர்

நேற்று செவ்வாயன்று சிங்கப்பூரில் புதிதாக 24,080 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது பலரையும் மீண்டும் கவலையடைய செய்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts