TamilSaaga

“மோசடி கும்பலுடன் சகவாசம்” : சிங்கப்பூருக்கு படிக்க வந்து, தவறான பாதையில் சென்ற “இந்திய மாணவர்” – 6 மாத சிறை

சிங்கப்பூரில் பயின்று வரும் இந்திய மாணவர் ஒருவர், உரிமம் பெறாத கட்டணச் சேவையைத் தொடர சதி செய்ததாகவும், தனது மற்ற இந்தியக் கூட்டாளியின் Whatsapp குழுவை நீக்கிவிட்டு வெளியேறி நீதியைத் தடுத்ததாகவும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 26 வயதான ஜஸ்ப்ரீத் சிங் என்ற அந்த நபருக்கு எட்டு கூட்டாளிகள் இருப்பதாகவும், அந்த எட்டு இந்தியர்களும் 20 வயதுக்குட்பட்ட நபர்கள் என்று சேனல் நியூஸ் ஏசியா அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரிலிருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி?

மேலும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவர்களுடைய கூட்டாளிகளாக செயல்பட்டு வருவதாகவும். அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த மோசடி கும்பல் அங்கிருந்து தான் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. Diploma in Hospitality & Tourism Management படிப்பிற்காக தண்டனை விதிக்கப்பட்ட சிங் 2019 செப்டம்பரில் சிங்கப்பூர் வந்துள்ளார். புக்கிட் பூர்மேய் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் தான் அவர் மற்றும் அவருடைய நான்கு சக குற்றவாளிகளுடன் வசித்து வந்தார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர் சிங்கப்பூர் வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, குற்றவாளி சிங்கின் Flat-Mate ஒருவர் அவருக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அங்கு அவர் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக தனது வங்கிக் கணக்கை வழங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அத்தகைய ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று அவர் சந்தேகித்தாலும், அவருக்கு ஒரு கமிஷன் உறுதியளிக்கப்பட்டது அதனால் அவர் அதை ஒப்புக்கொண்டார் என்று நீதிமன்ற அறிக்கை கூறுகிறது.

சிங் மற்ற கூட்டாளிகளுடன் ஒரு Whatsapp குழுவில் சேர்க்கப்பட்டார், இது பணமோசடி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் நிதி பரிமாற்றங்கள் பெறப்படுவதை உறுதி செய்யவும் பயன்படுத்தப்பட்டது என்று நீதிமன்றம் கூறுகின்றது. செப்டம்பர் 2, 2020 மற்றும் செப்டம்பர் 5, 2020-க்கு இடையில், சிங் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றச் சேவையை வழங்கினார், சிங்கப்பூர் டாலர்கள் 60,238 (USD 44,293) என மொத்தம் மூன்று உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களைப் பெற்றார். மாற்றாக, சிங் சிங்கப்பூர் டாலர்கள் 1,900 (USD 1,397) கமிஷனாகப் பெற்றார். கனடாவில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து எல்லை தாண்டிய சிண்டிகேட் மூலம் பணமோசடி சங்கிலியாக இந்த செயல்முறை மாறியது.

இறுதியில் கனடாவை சேர்ந்த இரண்டு நபர்களும் ஏமாற்றப்பட்டனர், இதில் இரண்டாவது கனேடிய நபர் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சிங்கப்பூர் காவல் படையிடம் ஆன்லைன் புகாரை தாக்கல் செய்தார், செப்டம்பர் 10 ஆம் தேதி DBS வங்கிக் கணக்கிற்கு 12,200 கனேடிய டாலர்களை (USD 9,516) மாற்றி ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். இதனை தொடர்ந்து இந்த மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts