TamilSaaga

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் மன வளர்ச்சி குன்றியவரா? உண்மை புரியாமல் செய்தியை திசை திருப்புகின்றனவா இந்திய ஊடகங்கள்?

கடந்த ஏப்ரல் 27ம் தேதி இந்திய வம்சாவளி நாகேந்திரன் கே. தர்மலிங்கம் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நாகேந்திரன் அறிவுசார் ஊனமுற்றவர் என்றும், போதைப்பொருள் கடத்தலின்போது அவர் மன அளவில் பிரச்சனை உள்ளவராக இருந்தார் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் சிங்கப்பூர் அரசு தரப்பு வாதங்களின்படி நாகேந்திரன் “அறிவுசார் ஊனமுற்றவர்” அல்ல என்பதை ஏற்றுக்கொண்ட மனநல மருத்துவர்களின் சாட்சியங்களை உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த குறிப்பிட்ட நிகழ்வின்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாகேந்திரன் சார்பில் ஆஜரான மனநல மருத்துவர் ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகிறது. “உயர்நீதிமன்றம் நான்கு வெவ்வேறு மனநல மற்றும் உளவியல் வல்லுனர்களின் நிபுணத்துவ சான்றுகள், மற்றும் அரசுத் தரப்பு மற்றும் தற்காப்புத் தரப்பின் மேலதிக சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததும் குறிப்பிடத்தக்கது.

மனதை ரணமாக்கிய 18 ஆண்டுகால வலி.. குழந்தையை கையில் ஏந்தியதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை – நம்மை ஆனந்த கண்ணீரில் மூழ்கடிக்கும் வீடியோ

“மேலும் நாகேந்திரன் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செயல்படுகிறார் என்று கருதிய உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது” என்று அப்போது MHA கூறியதும் நினைவுகூரத்தக்கது.

இந்திய ஊடகங்களும் நாகேந்திரன் மரணமும்

நாகேந்திரன் இறப்பு குறித்து செய்தி வெளியிட்டு வரும் பல இந்திய மற்றும் பிற நாட்டு ஊடகங்கள், அறிவுசார் குறைபாடுள்ள ஒருவருக்கு சிங்கப்பூர் அரசு மரண தண்டனை வழங்கியுள்ளதாக கூறிவருகின்றன. 34 வயதான நாகேந்திரன் அறிவுசார் மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இறுதி வரை நாகேந்திரனின் தரப்பில் அவர் மனநிலை குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றும், ஆனால் சிங்கப்பூர் அரசு அதற்கு செவிமடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தனது மகன் அதிகம் பேசமாட்டான் என்றும் இறுதியாக அவனை சிறையில் பார்த்தபோது அம்மா.. அம்மா.. என்று கதறியதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இறுதிவரை சிங்கப்பூர் அரசு அவர் எந்தவித குறைபாடும் இல்லாதவர் என்று கூறி நாகேந்திரன் தரப்பு வாதங்கள் அனைத்தையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை தண்டனைகள் அதிகமானால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts