TamilSaaga

Exclusive : சென்னையில் இருந்து சிங்கப்பூர் வந்த “140 தொழிலாளர்கள்” – மெல்ல மெல்ல இந்தியர்கள் உள்ளே வர அனுமதி?

உலக அளவில் கொரோனா காரணமாக பன்னாட்டு வணிகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா பரவல் அதிகமா காணப்பட்ட காரணத்தால் அண்டை நாடான இந்தியாவில் இருந்து ஊழியர்கள் சிங்கப்பூர் வர தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தடை தற்போது தளர்வு பெற தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Scal எனப்படும் Singapore Contractors Association Ltd நிறுவனத்தின் உதவியால் தற்போது மிகுந்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து 100க்கும் அதிகமான பணியாளர்கள் வெவ்வேறு பணிகளுக்காக சிங்கப்பூர் அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Scal நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்துடன் (MOM) இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மற்றும் Scal நிறுவனத்தின் உதவியோடு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அந்தந்த பணியாளர்களை அவர்களது வீட்டில் இருந்தே சென்னைக்கு அழைத்துவந்துள்ளது இந்த Scal நிறுவனம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தனிமைப்படுத்துதல்

பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களில் இருந்து முறையான பாதுகாப்பு நெறிமுறைகளோடு சென்னை அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்னை அழைத்துவரப்படும்போதும் வாகனத்திற்கு 12 பேர் என்ற முறையான பாதுகாப்பு அளவோடு அழைத்துவரப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சென்னையை அடைந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் நம்பப்படுகிறது.

அந்த 140 பணியாளர்களும் இந்தியாவில் மட்டும் மொத்தமாக 21 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளார். மேலும் இந்த 140 பேரிடமும் ‘நீங்கள் தான் சிங்கப்பூர் வரும் முதல் தொகுதி பணியாளர்கள், நீங்கள் எந்த அளவு பாதுகாப்போடு சிங்கப்பூர் வருகின்றீர்கள் என்பதை வைத்தே அடுத்தடுத்த பணியாளர்கள் தொகுதி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

சிங்கப்பூரில் தனிமைப்படுத்துதல்

மேலும் அண்மையில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வந்ததாக நம்பப்படும் 140 பணியாளர்கள் அனைவரும் சிங்கப்பூரில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருப்பார்கள். மேலும் பல இடங்களில் இந்த பணியாளர்களுக்கு PCR சோதனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடந்தே அவர்கள் தங்களது பணியிடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

VISTARA விமான சேவை.

சென்னையில் இருந்து வந்த பணியாளர்கள் அனைவரும் vistara விமான சேவை மூலம் சிங்கப்பூர் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts