TamilSaaga

சக பெண் ஊழியரை பின்னால் தட்டிவிட்டு “கூலாக பதில்” சொன்ன Flight Attendant – அதைவிட கூலாக “தலையில் தட்டி” உள்ளே போட்ட சிங்கப்பூர் நீதிமன்றம்

கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் விமானத்தில் பயணித்த சக பெண் ஊழியரின் பின்னால் தட்டிய 50 வயது Flight Attendantக்கு நேற்று திங்கள்கிழமை (மார்ச் 7) ஐந்து வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெறும் முப்பதே நிமிடம்… வெள்ள நீர் முழுவதும் வடிந்த அற்புதம்… இதுதான் உலகமே வியக்கும் சிங்கப்பூரின் “தனித்துவம்”

சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குச் சென்ற விமானத்தில் ஒரு மூத்த விமானப் பணியாளர் ஒருவர் தனது 27 வயது சக பெண் ஊழியரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சட்டப்பட்டார். கடந்த மாதம் ஜனவரி 17ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியிடப்பட்டது என்று CNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதான சிங்கப்பூர் நபர் என்றும், மேலும் அவர் அந்த விமானத்தில் இருந்த மூத்த கேபின் பணியாளர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் GAG ஆர்டர்கள் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயரைச் வெளியிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. விமான நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களும் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து திருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மே 3, 2019 அன்று சிங்கப்பூரில் இருந்து மணிலாவுக்கு திரும்பும் விமானத்தில் இருந்தனர். மேலும் இந்த சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் வணிக வகுப்பு பயணி ஒருவருக்கு அவருக்கான சேவைகளை வழங்கிக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த பயணியை நோக்கி சற்று சாய்ந்த நிலையில் நின்றுகொண்டிருந்த அந்த பணிப்பெண் தீடீரென்று யாரோ தனது பின்னால் பலமாக தட்டியதை உணர்ந்தார்.

திடுக்கிட அவர் திரும்பிப்பார்த்தபோது அந்த குற்றம்சாட்டப்பட்ட 50 வயது நபர் அவரை கடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை தவிர அங்கு வேறு யாருமில்லை, அப்போது அந்த பணிப்பெண்ணை நோக்கி திரும்பிப் பார்த்த அந்த நபர் நீ நிற்பது முறையாக இல்லை என்பதால் தான் அவ்வாறு செய்தேன். அதை தவிர வேறு எந்த உள்நோக்கத்துடனும் நான் அவ்வரும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை அந்த பணிப்பெண் விமான கேப்டனிடம் கூற அவரும் அந்த நபரை அழைத்து விசாரிக்க மேற்குறிய அதே பதிலை கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஜுலை 1 முதல் அமலாகும் தடை – வெளிநாட்டவர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு!

இதனையடுத்து மே 5 2019 அன்று அந்த பணிப்பெண் சிங்கப்பூர் திரும்பியபோது போலீசில் புகார் அளிக்க அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. துணை அரசு வக்கீல் லீ வெய் லியாங் குற்றவாளிக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை அளிக்குமாறு கேட்க இறுதியில் அந்த நபருக்கு 5 வார சிறை தண்டனை அளித்து மீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts