TamilSaaga

“அதிக பொருளாதார ஒருங்கிணைபை குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும்” – சிங்கப்பூர் துணைப் பிரதமர்

RCEP எனப்படும் உடன்பாட்டில் அண்டை நாடான இந்தியா எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூருடன் இணைத்துக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமர் Heng Swee Keat இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தற்போது தெரிவித்துள்ளார். உலகத்தில் மிகப்பெரிய தடையில்லாத வர்த்தக உடன்பாடாக கருதப்படுவது இந்த RCEP.

இந்த RCEP குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிலையில் தங்களுடைய உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கின்ற நோக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு இந்த RCEP உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய வர்த்தக தலைவர்களுக்கு மத்தியில் நடந்த இணையவழி கூட்டத்தில் சிங்கப்பூரின் துணைப்பிரதமர் Heng Swee Keat பங்கேற்று பேசினார். “உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பல்வகைப்படுத்தலுக்கு பங்களிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது” என்று திரு ஹெங் கூறினார். “இந்திய நிறுவனங்கள் அதன் உள்நாட்டு சந்தையை விட அதிகமாக அளவில் சேவை செய்யும் திறன், அளவு மற்றும் வளங்களைக் கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டத்தின் தொடக்க அமர்வில் துணை பிரதமர் பேசினார். மேலும் இந்த அமர்வை இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான ஃபோர்ப்ஸ் மார்ஷலின் இணைத் தலைவரும் சிஐஐ முன்னாள் தலைவருமான டாக்டர் நவசாத் ஃபோர்ப்ஸ் ஆகியோர் நிர்வகித்தார்.

Related posts