TamilSaaga

“பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்” – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் “பீட்டா” வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் சில தீவுகளில் பொதுமுடக்கம் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் “சுகாதார பாஸ்” என்ற ஒரு சிறப்புப் பாஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பிரான்ஸ் அரசு.

பிரான்ஸ் நாட்டில் உள்ள உணவு விடுதிகள், ரயில்வே நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் இந்த சுகாதார பாஸ் இன்றி பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சுகாதார பாஸ் வைத்திருப்பவர்களுக்கு சில இடங்களில் முகக்கவசம் அவசியமில்லை என்ற தளர்வுகளையும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் தற்போது பெருந்தொற்றின் நான்காம் அலை நடப்பில் உள்ள நிலையில் அமெரிக்கா தனது நாட்டு குடிமக்களுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு பயணிப்பது தொடர்பில் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பிரான்சுக்கு செல்வது தொடர்பில் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

NOT TRAVEL என்னும் நான்காம் கட்ட பயண எச்சரிக்கையை அமெரிக்கா பிரான்ஸ் நாட்டிற்கு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts