TamilSaaga

சிங்கப்பூரின் 7 செயற்கை கோள்களை கம்பீரமாக விண்ணில் செலுத்திய இந்தியா…. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி தள்ளிய சிங்கப்பூர்!

சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான ஏழு செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா சாதனை புரிந்துள்ளது. இதற்காக சிங்கப்பூர் அரசு இந்திய நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டினை தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் மூலம் இந்த ஏழு செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் ட்விட்டரில் இது குறித்து கூறும் பொழுது, சிங்கப்பூரின் செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கு உதவியாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், சிங்கப்பூரும் இந்தியாவும் விண்வெளி துறையில் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறும் பொழுது இஸ்ரோ விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் TSR எனப்படும் செயற்கைக்கோள் மிக முக்கியமானது என்றும் கூறினர்.

இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்தின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளானது தயாரிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் அரசு கூறியது. இந்த செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு தரை கட்டுப்பாடு மையத்திற்கு அதன் தரவுகளை அனுப்பி சோதனை செய்த பின் வெற்றிகரமாக இயங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் இரவு பகல் போன்ற எந்த காவல் நிலையமாக இருந்தாலும் புகைப்படத்தினை துல்லியமாக அனுப்பக் கூடியது என்று சிங்கப்பூர் தரப்பு கூறியுள்ளது.

சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் அனுப்பியதன் விளைவாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts