இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய நபர் தான் நாகேந்திரன் கே. தர்மலிங்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு பெருந்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதை அடுத்து அவரது மரணதண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 9 அன்று நடந்த நீதிமன்ற அமர்வில் இந்த தகவல் வெளியானது அறை முன்பு இது தெரியவந்தது. நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நவம்பர் 10 2021 அன்று தூக்கிலிடப்படுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரது மரண தண்டனைக்கு எதிரான அவரது மனுவை விசாரிக்க அவசரமாக கூட்டப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் அப்போது நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனையை நிறுத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 9 2021 அன்று நடந்த நீதிமன்ற அமர்வு தொடங்கியதும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆண்ட்ரூ பாங் பின்வருமாறு கூறினார்: “அவர் பெருந்தொற்றுக்கு நேர்மறையாய் சோதனை செய்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.” விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்து, அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை மரணதண்டனைக்கு தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கடந்த 2010ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரி சிங்கப்பூரின் குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கூப்பிடம் மனு தாக்கல், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் கருணை மனுவுக்கு ஆதரவாக 50,000 கையெழுத்துக்கள் கோரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருடைய வழக்கில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 24ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை அங்குள்ள தலைமை நீதிபதி சுந்தரேஷ் என்பவரும் அவருடன் இணைந்து Andrew, Prakash, Belinda உள்ளிட்ட நீதிபதிகளின் அமரவும் விசாரிக்கவுள்ளது.