TamilSaaga

“சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பணிப்பெண்” : இந்திய வம்சாவளி பெண், அவரது கணவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் கடந்த 2014ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவரை ஒருவருடைய மனைவி தாக்கியதை அடுத்து, அவரது குடும்பம், பணிப்பெண்களை பணியமர்த்துவதற்கு மனிதவள அமைச்சகத்தால் (MOM) தடை விதிக்கப்பட்டது, ஆனால் வேறு சில வழிகளை பயன்படுத்தி விதிகளை மீறியுள்ளார். இறுதியில் சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த தந்திரத்தை அறிந்ததும், சையத் முகமது பீரன் சையத் அமீர் ஹம்சா மற்றும் அவரது மனைவி சபா பர்வீன் வீட்டில் வேலைசெய்து வந்த பணிப்பெண்ணை அவரது சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

இதையும் படியுங்கள் : சீன நாட்டு பெண்ணுக்கு 25 வார சிறை

இந்நிலையில் 37 வயதாகும் சபா மற்றும் 41 வயதாகும் சையத் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) நீதியின் போக்கை வேண்டுமென்றே தடுத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டனர். தன்னுடைய குடும்பத்திற்காக பணிப்பெண்ணை வேலை செய்ய வைப்பதாக பொய்யான அறிவிப்புகள் செய்ததற்காக சையத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அந்த சிங்கப்பூரருக்கு மொத்தம் 36 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது மனைவி சபாவுக்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு இந்திய நாட்டை சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை பெற்ற சபா, தனது குடும்பத்தின் வீட்டுப் பணியாளருக்கு எதிராக தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக நீதிமன்றம் விசாரித்தது. இதனையடுத்து அவரது குடும்பம் MOM தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டது, அதாவது அந்த குடும்பம் பணிப்பெண்களை பணியமர்த்துவதிலிருந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்த வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் சோங் கீ என் கூறியதாவது, “கடந்த ஜூலை 2018-ல், ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதற்காக சிங்கப்பூரில் உள்ள திரு. சுரேஷ் முருகையனின் உதவியை சையத் நாடியதாக” நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களுக்கு உதவும் வகையில் திரு. சுரேஷ், இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண்ணான திருமதி அமினாவிற்கு வேலையளிப்பதாக MOMன் ஆன்லைன் ஒர்க் பாஸ் அமைப்பில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டது சையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் தான், இறுதியில் ஜூலை 17, 2018 அன்று, திருமதி அமினா சிங்கப்பூருக்கு வந்து அந்த தம்பதியருக்கு வேலை செய்யத் தொடங்கினார். இவர்களுக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர்.

முதல் மூன்று மாத வேலைக்கான ஊதியம் பெற்ற பிறகு, குறைந்தது இரண்டு மாதங்களாவது திருமதி அமினாவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜனவரி 24, 2019 அன்று, அவர் தனது பிரச்சினைகளை பிலிப்பைனா வீட்டு உதவியாளரிடம் பகிர்ந்து கொண்டார், அவர் வீட்டுப் பணியாளர்களுக்கான சேவை மைய எண்ணைக் கொடுத்தார். உடனடியாக அவர் மையத்தை தொடர்புகொள்ள, மையம் பின்னர் MOM க்கு தகவலைத் தெரிவித்தது, அது அதே நாளில் காவல்துறைக்கும் அறிவித்தது. இறுதியில் போலீஸ் அதிகாரிகள் தம்பதியரின் வீட்டிற்குச் சென்று பணிப்பெண்ணை தவறாகப் பயன்படுத்தியதாக MOMக்கு செய்தி தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts