எங்கும் எதிலும் தொழில்நுட்பமாக மாறிவரும் இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக கணினித் தொழிற்நுட்பத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு அந்த வேலைகளுக்கு ஏற்ற அறிவு சார்ந்த திறன்கள் இருந்தால் அதிக சம்பளம் தர நிறுவனங்கள் தயங்குவதில்லை. அதிலும் தினமும் மேம்பட்டு வரும் தொழில்நுட்ப துறையில், தற்போது நிறுவனங்கள் எதிர்பாக்கும் அல்லது அதிக சம்பளம் தர தயாராக இருக்கும் சில முன்னணி Programming Languages பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்
1.PYTHON
- PYTHON என்பது ஒரு பிரபலமான Programming Language ஆகும். இதன் பன்முகத் தன்மையால் இது Software Developer களின் முதல் விருப்பமாக உள்ளது. இது Guido van Rossum
- என்பவரால் உருவாக்கப்பட்டு 1991 இல் வெளியிடப்பட்டது
PYTHON எங்கு பயன்படுத்தப்படுகிறது?
- Web Development (server-side),
- Software Development,
- Mathematics,
- System scripting
- Data Science
- Artificial Intelligence
PYTHON சிறப்புகள்
இது Windows, Mac, Linux, Raspberry Pi, போன்ற வெவ்வேறு Platform களில் வேலை செய்கிறது.
Python, ஆங்கில மொழியைப் போன்ற எளிய Syntax கொண்டது
பைத்தானில் உள்ள Syntax அமைப்பானது டெவலப்பர்களை வேறு சில programming Languages களை விட குறைவான வரிகளுடன் programs எழுத அனுமதிக்கிறது
இதில் code எழுதப்பட்டவுடனே program ஐ இயக்க முடியும்
2. JAVA
JAVA வும் ஒரு பிரபலமான programming Language ஆகும். இது 1995 இல் உருவாக்கப்பட்டது. இது Oracle க்கு சொந்தமானது,
JAVA எங்கு பயன்படுத்தப்படுகிறது?
- Mobile applications (specially Android apps)
- Desktop applications
- Web applications
- Web servers and application servers
- Games
- Database connection
JAVA சிறப்புகள்
- இதுவும் Windows, Mac, Linux, Raspberry Pi, போன்ற வெவ்வேறு Platform களில் வேலை செய்கிறது
- தற்போதைய வேலை வாய்ப்பில் இதற்கு அதிக தேவை உள்ளது
- கற்றுக்கொள்வது எளிதானது மற்றும் பயன்படுத்த எளிதானது
- இது ஓப்பன் சோர்ஸ் மற்றும் இலவசமானது
- இது பாதுகாப்பானது மற்றும் வேகமானது.
- Java ஆனது C++ மற்றும் C# க்கு அருகில் இருப்பதால், புரோகிராமர்கள் அதிலிருந்து Java விற்கு மாறுவதை அல்லது Java விலிருந்து வேறு programming language க்கு மாறுவதை எளிதாக்குகிறது
3. JAVASCRIPT
- JavaScript என்பது சிறப்பான சக்தி வாய்ந்த அடுத்த programming language ஆகும்.
- இது Brendan Eich என்பவரால் 1995 இல் உருவாக்கப்பட்டது.
- இது interactive Web Application இல் பயன்படுகிறது.
- இது Games, Animated 2D and 3D graphics, Comprehensive database-driven apps களில் பயன்படுகிறது.
- இது புதியவர்கள் கற்றுக்கொள்ள எளிமையானது
4. GO (GOLANG)
- Go என்பது Google ஆல் உருவாக்கப்பட்ட ஒரு open source programming language ஆகும்.
- இது Data science, Artificial intelligence, Network server programming, Cloud-based applications, மற்றும் Server-side applications போன்றவற்றில் அதிக அளவில் பயன்படுகிறது.
- இது கற்றுக்கொள்ள எளிமையானது.
- இது புரிந்துகொள்ளவும் code எழுதுவதற்கும் ஏற்ற வகையில் எளிமையான syntax உடையது
5. RUST
- RUST என்பது open source Systems programming language ஆகும்.
- இது 2010 ஆம் ஆண்டு mozzilla இல் பணிபுரியும் போது Graydon Hoare என்பவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதனை உயர் செயல்திறன் கொண்ட Application எழுத பயன்படுத்தலாம்..
- Dropbox and Cloudflare போன்ற சில சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், RUST ஐ பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வேகமான சேவையை வழங்குகின்றனர்.
- கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக, RUST மிகவும் விரும்பப்படும் programming Language ஆக வாக்களிக்கப்பட்டுள்ளது
6. SQL (Structured Query Language)
- SQL என்பது தரவுத்தளங்களை( Database) அணுகுவதற்கும் கையாளுவதற்கும் ஒரு நிலையான programming language ஆகும்.
- SQL ஆனதுDatabase இல் தரவுகளை இணைக்கவும், அழிக்கவும், மீட்டெடுக்கவும், புதுப்பிக்கவும்,அட்டவணைகள் சேர்க்கவும் உதவுகிறது
7.SWIFT
- SWIFT programming language ஆனது Apple நிறுவனத்தால் 2014 இல் உருவாக்கப்பட்டது.
- இது முழு Apple Operating System வரிசையுடன் செயல்படும் அதிகாரப்பூர்வ மொழி: iOS, iPadOS, watchOS, macOS மற்றும் tvOS களில் பயன்படுகிறது.
- Apple நிறுவனமானது இந்த மொழியை அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிதாக வடிவமைத்துள்ளது.
மேற்கூறிய அனைத்து முன்னணி கணினித் துறை மொழிகளும் இணைய உதவியோடு எளிதாக நீங்களே கற்க இயலும் என்றாலும், அதனை முறையாக சொல்லித்தரும் இணைய வகுப்புகள் வழி கற்கும் போது மேலும் விரைவாகவும், சிறப்பாகவும் கற்க இயலும்.இதன் மூலமாக அதிக சம்பளம் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும்.
அன்றைய உலகில் மனிதனுடன் மனிதன் தொடர்பு கொள்ள மொழிகள் வந்ததைப் போன்று, இன்றைய கணினி உலகில் கணினியுடன் மனிதன் தொடர்பு கொள்ள வந்துள்ள இந்த கணினி மொழிகளையும் கற்பதால் நன்மை என்றும் மனிதனுக்கே.