நீங்கள் இந்தியாவில் நர்சிங் படிப்பை முடித்துளீர்களா? சிங்கப்பூர் சென்று நர்சிங் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளதா? கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வேலையைப் பெற்றிடுங்கள்.
வெளிநாடுகளில் பயின்ற மருத்துவப் பணியாளர்களுக்கு அந்ததந்த நாட்டின் அரசு ஒரு மருத்துவ பயிற்சி சான்றிதழ் வழங்கும். குறிப்பிட்ட நாட்டவர் வெளிநாட்டில் படித்திருந்தாலும் சரி, வெளிநாட்டினர் குறிப்பிட்ட நாட்டிற்கு வேலைக்கு வரவேண்டுமானாலும் சரி அவர்களின் திறன்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் தான் அந்த நாட்டில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளவதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
சிங்கப்பூரிலும் இதே போல் மருத்துவ பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பின்னர் தான் சிங்கப்பூர் அரசாங்கத்தின் மருத்துவ பயிற்சிக்கான ஒப்புதலைப் பெற முடியும். சிங்கப்பூரில் சென்று வேலை செய்ய இந்த சான்றிதழ் மிகவும் முக்கியம்.
எப்படி இந்த சான்றிதழைப் பெறுவது?
- முதலில் நீங்கள் இந்தியாவில் இருந்தபடியே சிங்கப்பூர்-ல் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- வேலைக்கு விண்ணப்பித்த பின்னர் உங்கள் விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால் குறிப்பிட்ட மருத்துவ நிறுவனத்தில் இருந்து Job Offer Letter-ஐ பெற வேண்டும்.
- அதை வைத்து மேலும் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து SNB எனப்படும் Singapore Nursing Board-ல் மருத்துவ பயிற்சி சான்றிதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பித்த பிறகு உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்க்கு 6 வாரங்களுக்கு மேல் ஆகும்.
- SNB-ல் Register செய்த பிறகு உங்களுக்கான தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் தான் வேலைக்கு அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வீதம் வருடம் முழுவதும் நடத்தப்படும்.
- தேர்வு முடித்த பின்னர் உங்களுக்கான நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் வேலை வாய்ப்பும் அதற்கான Visa Process-களும் நடைபெறும்.
- இந்த SNB விண்ணப்பத்தை உங்கள் சார்பாக நீங்கள் வேலை பெறும் மருத்துவ நிறுவனம் சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் தேர்வுகள் சிங்கப்பூரில் நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி மையங்களும் ஏராளமாக உள்ளன. அதனைப் பயன்படுத்தியோ அல்லது அவரவர் சொந்த முயற்சியிலோ இந்த தேர்வுக்கு தயாராகலாம்.
மேலும் தகவல்களுக்கு SNB-ன் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்!
https://www.healthprofessionals.gov.sg/snb