TamilSaaga

43 ஆண்டுகளுக்கு முன்பு.. 1978ல் சிங்கப்பூரை புரட்டிப்போட்ட வெள்ளம் – எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

தீவு நாடான சிங்கப்பூரில் வெள்ளம் என்பது பிற நாடுகளை போல சர்வசாதாரமான ஒன்று தான் என்றபோதும் யாராலும் மறக்க முடியாத ஒரு வெள்ளம் என்றால் அது சிங்கப்பூரை புரட்டிப்போட்ட 1978ம் ஆண்டு நிகழ்த்த வெள்ளம் என்றால் அது மிகையல்ல.

1978 சிங்கப்பூர் வெள்ளம், சிங்கப்பூரின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக தற்போது வரை இருந்து வருகின்றது. 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 3ம் தேதி வரை வெறும் 24 மணி நேரத்தில் 512 மில்லிமீட்டர் (20.2 அங்குலம்) மழை பெய்தது.

இந்த வெள்ளத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து இராணுவம் மற்றும் காவல்துறை படகுகள் மூலம் ஐந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த வெள்ளம் ஏற்படுத்திய மொத்த சேதம் சுமார் 10 மில்லியன் சிங்கப்பூர் டாலரை எட்டியது, இது டிசம்பர் 1969ல் சிங்கப்பூரை தாக்கிய ஹரி ராய வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது.

Related posts