சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதென்று முடிவு செய்துவிட்டீர்களா? முடிந்த அளவு ஏஜெண்ட்ஸ் இல்லாமல் வேலைக்கு அப்ளை செய்து வரப்பாருங்க. ஏஜெண்ட்ஸ்களிடம் பணம் கொடுக்காமல், வேலைக்கு வருவதற்கான வழிமுறைகளை நாம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதனை ஃபாலோ செய்து பாருங்க.
ஒருவேளை முடியாவிட்டால்.. ஏஜெண்ட்களிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தீர்கள் என்றால், சிங்கப்பூரில் உள்ள ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு பேசுங்கள். ஏனெனில், சிங்கப்பூரில் உள்ள ஏஜெண்ட்ஸ் சிங்கை அரசை மீறி ஒன்றும் செய்ய முடியாது. வேலைக்கு உங்களை எடுக்க முடியும் என்றால் பணம் வாங்குவார்கள். இல்லையெனில், உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்கச் சொல்வார்கள்.
அதேசமயம், ஏஜெண்ட்ஸ்களின் நம்பகத்தன்மையை நீங்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும். ஆம்! அதற்கான வசதியை நமது சிங்கை அரசே செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜென்சிகள் குறித்தும், அவர்களது சேவைகள் குறித்தும் உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு https://www.mom.gov.sg/eservices/services/employment-agencies-and-personnel-search என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். இது சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளமாகும். இந்த லிங்கை க்ளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும். அதில், “search” எனும் ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால் வேறொரு பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் அணுக விரும்பும் ஏஜென்சியின் பெயரை பதிவிட்டால், அவர்களின் ஜாதகமே உங்கள் கைக்கு வந்தது போலாகும்.
இந்த இணையதளத்தில், உரிமம் பெற்ற ஏஜென்சிக்கள் எவை?, அவர்களின் பெயர் அல்லது இருப்பிடம் ஆகிய காரணிகளைக் கொண்டு நீங்கள் தேடலாம். அதாவது, உங்களது ஏஜென்சி தற்போது உரிமம் வைத்துள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் வழங்கும் சேவைகள், அவர்களின் தொடர்பு விவரங்களையும் காணலாம்.
அதுமட்டுமின்றி, நீங்கள் தேடும் போது கிடைக்கும் ரிசல்ட்டில் உள்ள ஏஜென்சியின் பெயருக்கு அருகில் உள்ள arrow-வை க்ளிக் செய்தால், அந்த ஏஜென்சி மூலம் எத்தனை பேருக்கு இதுவரை வேலை கிடைத்துள்ளது என்ற தகவலையும் நீங்கள் அறியலாம். இதன் மூலம், உங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். அதுபோல், அந்த ஏஜென்சி மூலம் எத்தனை பேர் retention மற்றும் transfer பெற்று உள்ளார்கள் என்ற தகவலும் தெரிந்து விடும்.
| இந்த பட்டியலில் Under Revocation / Suspension / Surveillance ஆகிய பிரிவுகளில் இருக்கும் ஏஜென்சிகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது. MOM கூட இதையே பரிந்துரைக்கிறது. மேலும் சிக்க ஏஜென்சி மீது demerit points இருக்கும். சிங்கை அரசின் விதிகளை, நடைமுறைகளை சரிவர பின்பற்றாதவர்களுக்கு இதுபோன்று புள்ளிகள் தகுதியிழப்பு செய்யப்பட்டிருக்கும். ஸோ, அப்படிப்பட்ட ஏஜென்சிகளை தவிர்ப்பதும் நல்லது. |
MOM வெப்சைட்டிலேயே, ஏஜென்சி தேடல் குறித்த user guide உள்ளது. தேவைப்படும் பட்சத்தில், அதனை படித்த பிறகும் கூட நீங்கள் தேடலாம். இறுதியாக, ஏஜென்சிக்கு கொடுப்பதற்கு முன்பு, ஒருமுறைக்கு லட்சம் முறை யோசித்து, ஆய்வு செய்து முழு நம்பிக்கை வந்த பிறகு முடிவு பண்ணுங்கள். அதுவரை அவசரம் வேண்டாம். சிங்கப்பூரில் பலர் வருவார்கள், போவார்கள். ஆகையால் கணிசமாக வேலை வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஸோ, இந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பது போல், நம்பகமான ஏஜென்சியை கண்டறிந்து சிங்கப்பூரில் வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க!
ஆல் தி பெஸ்ட்!