பெருந்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூரில் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு பதிலாக 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய தின கூட்ட உரையும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீயின் தேசிய தின உரை வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரதமரின் உரையை பிற அமைச்சர்கள் மற்ற சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழியில் வழங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் இந்த உரையை மாண்டரின் மொழியிலும், சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசாகோஸ் சுல்கிஃப்லி மலாய் மொழியிலும். போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தமிழ் மொழியிலும் இந்த உரையை நிகழ்த்துவார்கள்.
மேலும் இந்த தேசிய தின உரையை முதலில் சிங்கப்பூர் பிரதமர் ஆங்கிலத்தில் அளிப்பார். இந்த உரையை பிரபல CNA நிறுவனம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு முதலில் ஒளிபரப்பும் என்று தகவல் வெளியாகி உள்ளது.