TamilSaaga

சிங்கப்பூரில் ஏஜெண்ட்ஸ் இல்லாமல்.. பல ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தந்த “STJobs”.. ‘ஒன் டூ ஒன்’ இன்டெர்வியூ.. நேரடி அப்பாயிண்ட்மெண்ட்!

சிங்கப்பூரில் வேலைக்கு வர விரும்பும் நபர்களுக்கு, சரியான வழியில் எப்படி வர வேண்டும் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கும் செய்தி இது.

நீங்கள் தமிழகத்தில் நகரப்பகுதியில் இருந்தாலும் சரி.. கிராமப்பகுதியில் இருந்தாலும் சரி.. சிங்கப்பூரில் வேலைக்கு ஏற்பாடு செய்ய உங்களுக்கு தேவை இன்டர்நெட் வசதியும், ஒரு மொபைலோ அல்லது லேப்டாப்போ தான்.

சரி.. இப்போது ஏஜெண்ட் மூலம் வேலைக்கு அணுகாமல், “STjobs” வெப்சைட் மூலமாக எப்படி நீங்களே வேலைக்கு அப்ளை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 1: https://www.stjobs.sg/ என்ற STJobs இணையதள லிங்கை ஓபன் செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 2: HomePage-ன் மேல் இடதுபுறத்தில் அமைந்துள்ள “Jobs” எனும் tab-ஐ கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: இப்போது நீங்கள் முக்கியமான Keywords அல்லது Category வாயிலாக வேலைகளைத் தேடலாம். குறிப்பிட்ட வேலை செயல்பாடுகள், தொழில்கள் மற்றும் இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேடலை இன்னும் எளிதாக்க முடியும்.

ஸ்டெப் 4: உங்களுக்கு ஏற்ற Job Post ஏதாவது நீங்கள் கண்டறிந்தால், அந்த வேலையின் முழு விவரங்களைப் பார்க்க, அந்த post-ன் தலைப்பில் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: அந்த குறிப்பிட்ட வேலை உங்களுக்கு பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்க, வேலை விவரம், தேவைகள் மற்றும் அது சார்ந்த பொறுப்புகள் என்னென்ன என்பதை முழுதாக படிக்கவும்.

ஸ்டெப் 6: Job Requirements படித்த பிறகு, உங்களுக்கு இந்த வேலை ஏற்றதாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால், அந்த பக்கத்தின் கீழே உள்ள “Apply Now” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 7: உங்களிடம் ஏற்கனவே ST Jobs தளத்தில் அக்கவுண்ட் இருந்தால், நேரடியாக உங்களால் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இப்போது தான் நீங்கள் புதிதாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், இப்போது நீங்கள் ஒரு புதிய அக்கவுண்ட் ஓபன் செய்தாக வேண்டும்.

ஸ்டெப் 8: நீங்கள் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கியதும் அல்லது உள்நுழைந்ததும், உங்கள் வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பத் தொடங்கலாம். உங்கள் தனிப்பட்ட விவரங்கள், பணி அனுபவம், கல்வி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்.

ஸ்டெப் 9: உங்கள் விண்ணப்பம் மற்றும் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் இன்னபிற துணை ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

ஸ்டெப் 10: விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றியதும், உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க “Submit” பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் Application, சிங்கப்பூரில் உள்ள அந்த குறிப்பிட்ட கம்பெனியின் மனித வளத்துறைக்கு மாற்றப்படும். அங்கு பணியாற்றும் HR உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு தொலைபேசி மூலம் அவர் அழைப்பு விடுப்பார். குறைந்தது நீங்கள் விண்ணப்பித்து 2 – 3 நாட்களில் உங்களுக்கு அழைப்பு வந்துவிடும்.

அதன் பிறகு, அவர்கள் தங்கள் கம்பெனியின் கோட்பாடுகளுக்கு ஏற்ப, நேர்காணல்கள் நடத்தி, பிறகு ஆவணங்களை சரிபார்த்து, Final Discussion-க்கு ஏற்பாடு செய்வார்கள். அதில், உங்களது சம்பளம், தங்குமிடம் வசதி, விசா போன்ற அனைத்து தகவல்களும் விவாதிக்கப்படும். அனைத்தும் உங்களுக்கு ஓகே-வாக இருந்தால், Offer Letter ரிலீஸ் செய்வார்கள்.

இங்கு நீங்களும், அந்த HR மட்டுமே தான் இருப்பீர்களே தவிர, வேறு மூன்றாம் நபர் எவரும்.. அதாவது ஏஜெண்ட்ஸ்களுக்கு இங்கு இடமில்லை. நேரடியாக உங்களிடம் சம்பளம் குறித்து விவாதித்து அதை உறுதி செய்த பிறகு, உங்கள் நேரடியாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும் அனுப்பப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே.

படிப்பு, வேலைக்கான முன் அனுபவம், இன்டர்நெட்டில் வேலைக்கான தேடல் என்ற இந்த மூன்று தகுதியும் உங்களிடம் இருந்தால், ஏஜெண்ட் இல்லாமல் உங்களால் சிங்கப்பூர் வருவது உறுதி என்று சொல்ல மாட்டேன்.. எளிது என்பேன். எல்லாவற்றையும் விட முக்கியமான தகவல், இப்படி வெப்சைட்டில் நேரடியாக அப்ளை செய்து வேலைக்கு வந்தவர்களுக்கு, மொத்த செலவே 1 லட்ச ரூபாய்க்குள் முடிந்துவிட்டது என்பதே!.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts