எம்ப்ளாய்மென்ட் பாஸ் என்பது வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதிக்கும் பாஸ் ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே எம்ப்ளாய்மென்ட் பாஸுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். வேலைவழங்குபவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் ஒரு வேட்பாளரின் எம்ப்ளாய்மென்ட் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு பாஸிற்கான விண்ணப்பம் அனைத்து நாட்டினருக்கும் திறக்கப்பட்டுள்ளது.
எம்ப்ளாய்மென்ட் பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான தகுதி அளவுகோல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
• விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
• நிர்வாகம் அல்லது சிறப்புப் பணியில் வேலை செய்ய வேண்டும்.
• நிலையான மாதச் சம்பளம் குறைந்தது $ 4,500 இருக்க வேண்டும். இளம் பட்டதாரிகள் நல்ல நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் $4,500 சம்பாதித்தால் தகுதி பெறலாம். மூத்த மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெற அதிக சம்பளம் தேவை.
• ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதிகள் பொதுவாக ஒரு நல்ல பல்கலைக்கழக பட்டம், தொழில்முறை தகுதிகள் அல்லது சிறப்பு திறன்கள். மேலும் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தகுதிகள் ஏற்க்கப்படாது.
ஒரு நிறுவனம் அங்கீகாரம் பெற்றதா என்பதைச் சரிபார்க்க உலகளாவிய சரிபார்ப்பு முகவர் மற்றும் சர்வதேச அங்கீகார அமைப்புகளை தொடர்புகொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு விண்ணப்பத்தையும் வேட்பாளரின் சம்பளம், சாதனைப் பதிவுகள், பணி அனுபவம், திறன் தொகுப்புகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தரவரிசை போன்ற பல்வேறு தகுதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
தகுதிச் சம்பள அளவுகோல்கள் செப்டம்பர் 1, 2020 முதல் புதிய விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2020 முதல் நிதிச் சேவைத் துறையில் புதிய EP விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 40 வயதிற்குட்பட்ட முதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தகுதிச் சம்பளம் அதற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் இளைய வழி விண்ணப்பதாரர்களுக்கான தகுதிச் சம்பளம் குறைந்தபட்ச தகுதிச் சம்பளத்தை விட இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. 2021 மே 1 முதல் பாஸ்கள் காலாவதியாகும் பட்சத்தில், EP களைப் புதுப்பிப்பவர்களுக்கு புதிய சம்பள அளவுகோல் பொருந்தும். ஒரு வேட்பாளர் எம்ப்ளாய்மென்ட் பாஸ் தேவைகளைப் பூர்த்திசெய்கிறாரா என்பதற்கான குறிப்பைப் பெற சுய மதிப்பீட்டுக் கருவியை(SAT) பயன்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை மதிப்பிடுவதற்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.
விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்று SAT காட்டினால் எம்ப்ளாய்மென்ட் பாஸுக்கு விண்ணப்பிக்கக்கூடாது ஏனெனில் அது நிராகரிக்கப்படும் எனவும் விண்ணப்பதாரர் தகுதியானவர் என்று SAT காட்டினால் வேட்பாளர் தேர்ச்சி பெற 90% வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர் சந்தை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் எம்ப்ளாய்மென்ட் பாஸ் விண்ணப்பங்களை உருவாக்கும் முதலாளிகள் முதலில் MyCareersFuture இல் விளம்பரம் செய்து அனைத்து விண்ணப்பதாரர்களையும் நியாயமான முறையில் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல்லாத வெளிநாட்டு முதலாளியாக நீங்கள் இருந்தால உள்ளூர் ஸ்பான்சராக செயல்பட நீங்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் சிங்கப்பூரில் புதிதாக விரிவடைந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தால் Tech@SG திட்டத்திற்குத் தகுதி பெறலாம்.