TamilSaaga

இரண்டாவது கணவரை ஏமாற்றிய மனைவி… மகள் திருமணத்தில் லைவ்வாக ஓடிய கசமுசா லீலைகள்… ஆனா கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆசாமி அவரோட முதல் கணவராம்! அடே என்னங்கடா!

20 வயதான ஜப்பானியப் பெண்ணான மொமோகா தனது திருமண நாளன்று, தனது இரண்டாம் தந்தை யூட்டாவிடமிருந்து “சிறப்பு திருமணப் பரிசை” வந்ததையடுத்து ஆச்சரியப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அதனால் பெரிய உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

விழாவின் போது, 37 வயதான யூதா, மகளுக்காக ஒரு சர்ப்ரைஸ் தயார் செய்ததாகவும், விருந்தினர்களை திருமண மண்டபத்தில் உள்ள திரையைப் பார்க்கச் சொன்னதாகவும் எம்சி அறிவித்தார். இருப்பினும், மோமோகாவின் மகிழ்ச்சியானது, அவரது தாயார் ஹிரோகோ, வேறொரு ஆணுடன் கள்ள உறவு கொண்டதாகத் திரையில் காணப்பட்ட வீடியோ தெளிவாகத் தெரிந்தவுடன், அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்து இருக்கிறார்.

யூதா பின்னர் அங்கிருந்த மைக்கை எடுத்து கொண்டு “இவர்கள் இருவரும் என்னை ஏமாற்றி கள்ள உறவில் இருந்தனர் எனக் கூறினார். வீடியோவில் இருப்பவர் ஹிரோகோவின் முன்னாள் கணவர் சடோஷி என்பதும், அவர் மொமோகோவின் தந்தை என்பதும் தெரியவந்தது. திருமண விழாவில் இருந்த அவர் வீடியோவை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

இதையும் படிங்க: பெற்ற தாயை விட ஒருபடி மேல் யோசித்த துபாய் அரசு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும்.. துபாய் முழுவதும் “இலவச உணவு” தரும் வெண்டிங் மெஷின்!

மோமோகா கண்ணீர் விட்டு, “என் அம்மா என் திருமணத்தை அழித்துவிட்டார்” எனக் கூறி அழுததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்னை குறித்து கூறிய மோமோகாவின் தாய், தன் மகள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததில் இருந்து இது தொடங்கியது என்று அவர் கூறினார். எனது முன்னாள் கணவரை அவளது திருமணத்திற்கு அழைக்க விரும்பினோம், நாங்கள் என் வீட்டில் சந்தித்தோம். நாங்கள் கடைசியாகப் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன, எங்களின் கடந்தகால மகிழ்ச்சியின் நினைவுகள் என் மனதை அலைக்கழித்தன, என்று ஹிரோகோ கூறினார்.

அவருடைய வியாபாரம் தோல்வியுற்றபோது கடன்களால் விவாகரத்து செய்ய நேரிட்டபோது அவர்கள் ஒருவரையொருவர் கண்ணீர் விட்டு அழுததை நினைவு கூர்ந்தார். இப்போது அவர் மீண்டும் நல்ல நிலையில் இருக்கிறார். அதனால் அவர் மீதான என் காதல் மீண்டும் வளர்ந்தது. நான் தான் இந்த விவகாரத்தைத் தொடங்கினேன். அவளது முன்னாள் கணவரும் மறுமணம் செய்து கொண்டார். எங்கள் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டால் அது இரு குடும்பங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். எனவே நாங்கள் கூடுதல் கவனமாக இருந்தோம்.

இதையும் படிங்க: பாடம் எடுத்த டீச்சரே மனைவி… 24 வயது வித்தியாசம்.. கணவரை விவாகரத்து செய்து அதே சர்ச்சில் ஸ்டூடண்ட்டை கல்யாணம் செய்த பெண் – இன்று ஒரு நாட்டுக்கே தலைவர்!

குறுஞ்செய்திகள் அல்லது புகைப்படங்கள் வடிவில் நாங்கள் ஆதாரங்களை விட்டுச் செல்லவில்லை, எங்கள் மகளின் திருமணத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி நாங்கள் எப்போதும் என் வீட்டில் சந்தித்தோம். என் கணவர் எப்போதும் வேலைக்காக வெளியே இருந்தார், என் மகள் தன் காதலனுடன் வாழ்ந்து வந்தாள். அது எங்களுக்கு வசதியாக இருந்தது. இந்த விவகாரம் சில மாதங்கள் தொடர்ந்தது. என்னுடைய இரண்டாவது கணவருக்கு என் மீது சந்தேகம் வரும் வரை பிரச்னை இல்லாமல் சென்றது.

நான் வித்தியாசமாக நடந்துகொள்கிறேன் என்று அவர் திடீரென்று கூறினார், மேலும் என் தொலைபேசியை ஆராய்ந்தார். அவரிடம் உறுதியான ஆதாரம் இல்லை, ஆனால் எனது முன்னாள் கணவரிடம் இதைப் பற்றி கூற முடிவு செய்தேன். மாட்டும் போது பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தங்கள் விவகாரத்தைத் தொடரலாம் என்று நினைத்தேன். ஆனால் முன்னாள் கணவர் அதற்கு உடன்படவில்லை.

மகளின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால், அவர்களது விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான நேரம் என்று அவரது முன்னாள் கணவர் நினைத்தார். எனக்கு கணவர் இருப்பதை நினைவு கூர்ந்தார். அவள் மீண்டும் ஒருமுறை மனம் உடைந்தாலும், வீட்டில் சூழ்நிலை மாறியிருப்பதைக் கவனித்தாலும், அந்த விவகாரம் முடிந்ததிலிருந்து தன் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஹிரோகோ நினைத்தாள்.

அந்த நிலையில் தான் மகள் திருமணத்துக்கு ஒரு கிஃப்ட் தயார் செய்து இருப்பதாக அவர் கூறியது நான் ஆச்சரியப்பட்டேன். நான் அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எங்கள் மகளின் திருமண நாளில் அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுத்தார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றிலிருந்து துரோகத்திற்கான விலையைக் கொடுத்து விட்டேன்.

என் மகள் என்னை மறுத்துவிட்டாள். என்னை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் கொடுப்பேன் என்றார். ஒவ்வொரு நாளும் நான் ஹோட்டலில் இருந்து ஹோட்டலுக்கு மாற வேண்டி இருக்கிறது. “நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்.” என்றார் வருத்தத்துடன்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts