TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளருடன் தனிமையில் இருந்த பணிப்பெண் – கையும் களவுமாக பிடித்த முதலாளி – சட்டத்தில் இருந்து தப்பித்தது எப்படி?

சிங்கப்பூரில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. செக்ஸ் தொடர்பான இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர் எந்தவித தண்டனையும் இன்றி தப்பினர். கடுமையான சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரில் அந்த வெளிநாட்டு ஊழியர் எப்படி தப்பித்தார் என்பது புரியாத புதிராக இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

அதாவது, கடந்த 2021 டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள வீடு ஒன்றில் பணியாற்றிய வெளிநாட்டைச் சேர்ந்த பணிப்பெண், அதே வீட்டில் தான் தங்கியிருக்கும் அறையில் ஆண் நண்பருடன் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆண் நண்பரும் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் தான். இருவரும் அன்றைய பொழுதின் இரவை ஒன்றாக கழித்தது தெரிய வந்தது.

அந்த வீட்டின் முதலாளி பெயர் வோங். சம்பவத்தையடுத்து நடந்த போலீஸ் விசாரணை முடிந்த பிறகு வோங் Mothershipக்கு அளித்த தகவலில், “அந்த பணிப்பெண் வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்து குடும்பத்திற்கு தேவையான காலை உணவை சமைப்பார். ஆனால் சம்பவம் நடைபெற்ற டிசம்பர் 8ம் தேதி காலை 7:30 மணி ஆகியும் அந்த பெண் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, எனது கணவர் அவரை எழுப்ப அந்த அறைக்குச் சென்ற போது, பணிப்பெண் கால்சட்டை அணிந்திருந்த ஒரு நபருடன் ஒரே படுக்கையில் ஒன்றாக உறங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் “சோவா சூ காங்” Dormitory நிலைமை படுமோசம்.. ரணவேதனை அனுபவிக்கும் வெளிநாட்டு ஊழியர் – பாடுபடுத்தும் கோவிட்

உடனே நானும் எனது கணவரும் வீட்டிற்கு உடனடியாக போலீஸை அழைத்தோம். போலீசார் வந்து விசாரித்ததும், வீட்டின் உரிமையாளர்களான எங்களுக்கு தெரியாமல், அந்த நபரை தனது அறைக்கு அழைத்ததை அப்பெண் ஒப்புக்கொண்டாள். அந்த நபரும் ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்ல, அவர்கள் இருவரும் ஒன்றாக இரவை கழிப்பது இது முதன் முறையல்ல என்பதும் தெரியவந்தது. இரு வாரங்களாகவே எங்கள் வீட்டிற்கு அந்தவெளிநாட்டு ஊழியரை அழைத்து அப்பெண் உல்லாசமாக இருந்திருக்கிறார். பிறகு யாருக்கும் தெரியாமல், விடியற்காலை 4 மணிக்கு அந்த நபர் வீட்டை விட்டுச் சென்றது தெரிய வந்தது. சம்பவத்தன்று இருவரும் அசந்து தூங்க, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்” என்று கூறினார்.

எனினும், இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தியும், சம்பந்தப்பட்ட அந்த வெளிநாட்டு ஊழியருக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முடிவு தங்களை அதிருப்தி அடையச் செய்ததாக வோங் தம்பதி Mothership-யிடம் பேட்டி அளித்த போது கூறியிருந்தனர். இந்நிலையில், அந்த வெளிநாட்டு ஊழியர் தண்டனையில் இருந்து தப்பித்தது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உரிமையாளர் வோங் இதற்கான காரணத்தை Mothership-ல் கூறியிருக்கிறார். அதாவது, இரண்டு வாரங்கள் முழுமையாக போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணைக்கு பிறகு அந்த பணிப்பெண் மற்றும் அறைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர் ஆகிய இருவருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீசார் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் Employment விசாவில் உடனடி வேலை வாய்ப்பு” : 65,000 ரூபாய் வரை சம்பளம் – முழு விவரம்

“அயல்நாட்டுத் தொழிலாளியிடம், அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று காவல்துறையினரால் கூறப்படுகிறது. உதவியாளர் அவர்களுக்குத் தெரியாமல் கதவுகளைத் திறக்கும் வரை அவர்கள் தனியார் வீடுகளுக்குள் நுழையலாம் என்று இந்த ஓட்டையைப் பற்றி அவர் தனது சக நண்பர்களுக்குத் தெரிவிப்பார். சட்டப்பூர்வ வீட்டு உரிமையாளர்கள் அல்லது முதலாளிகள்.”

இதுகுறித்து பேசிய உரிமையாளர் வோங், “இரண்டு வார விசாரணைக்கு பிறகு இருவர் மீதும் நடவடிக்கை இல்லை என்று போலீசார் கூறிவிட்டனர். அறைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றனர். அதாவது, சிங்கப்பூரில் ஒரு தனி நபருக்கு சொந்தமான வீட்டில், அதன் உரிமையாளருக்கு தெரியாமல், இங்கு பணிபுரியும் ஊழியர் மற்றொரு ஊழியரை வீட்டிற்கு அழைப்பதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். உரிமையாளர் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இப்போது அந்த வெளிநாட்டு ஊழியரை விட்டுவிட்டனர். அந்த நபர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் சென்று சிங்கப்பூர் சட்டத்தில் இப்படியொரு loophole இருப்பதாக கூறினால் என்ன ஆவது? பணிப்பெண்கள் கதவைத் திறந்தால் யார் வேண்டுமானாலும் தனியாருக்கு சொந்தமான வீடுகளுக்குள்ளே நுழையலாமா? அந்த நபரை விடுவித்தது, இப்படியொரு சீர்கெடுக்கு வழிவகுக்காதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts