TamilSaaga

“மின்னணு வேப்பரைசர்களை திருட திட்டம்” : டெலிவரி செய்பவர் எடுத்த துரித முடிவு – வசமாக சிக்கிய மூன்று பேர்

சிங்கப்பூரில் 23 வயது இளைஞன் ஒருவர் டெலிவரி செய்பவரிடமிருந்து மின்னணு வேப்பரைசர்களை திருட மற்ற இருவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதை திருடி பிறரிடம் லாபத்திற்கு விற்கவும் அவர் முயற்சித்துள்ளார். அனால் துரிதமாக செயல்பட்ட அந்த டெலிவரி செய்பவர் உடனைடியாக போலீஸை அழைத்த நிலையில் அந்த மூவரும் பிடிபட்டனர். கடந்த அக்டோபர் 27 அன்று ஜஸ்டின் யோ கியோங் ஸ்வீக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் கார் பார்க்கிங் பகுதியில் நடந்த சண்டை

மேலும் அவரது கூட்டாளிகளின் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எலெக்ட்ரானிக் வேப்பரைசர்கள் மற்றும் உதிரிபாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை சுகாதார அறிவியல் ஆணையத்தால் (HSA) வழக்குத் தொடரப்பட்ட எட்டு பேரில் இயோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த 8 பேரில் ஒரு 19 வயது இளைஞரும் அடங்குவார்.

அவர்களிடமிருந்து 70,000 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இ-வேப்பரைசர்கள் மற்றும் உதிரிபாகங்கள், வெளிநாட்டில் இருந்து வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த எட்டு குற்றவாளிகளுக்கும் மொத்தம் 57,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று HSA தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இங்கு கிளிக் செய்யவும்

19 வயதான டாங் வீ மெங், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக பொருட்களைக் கடத்த முயன்றபோது காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டார். இவர் டெலிகிராம் என்ற செய்தி தளம் மூலம் இ-வேப்பரைசர்களை விற்பனை செய்து வந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts