TamilSaaga

சிங்கப்பூர் தேசிய தின ஸ்பெஷல் : முதல் சுதந்திர தினத்தில் அலைமோதிய கூட்டம்… எவ்வளவு மக்கள் கலந்துகொண்டார்கள் தெரியுமா?

சிங்கப்பூர் ஆகஸ்ட் மாதம் 9ம் நாள் 1966ல் தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

சரியாக காலை 9 மணிக்கு ஜனாதிபதி யூசோப் இஷாக் வந்தடைந்ததும் விழா துவங்கியது. அமைச்சரவை உறுப்பினர்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சைனா டவுன் வழியாக நடைபெற்ற சீருடை அணிந்த அணிவகுப்புடன் இணைந்தனர்.

போர்ட் கேனிங் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கியது. அதில் கவனிக்கத்தக்க ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. சுமார் 90 நிமிடத்திற்கு அந்த பட்டாசு வெடிப்பு நிகழ்ந்து காண்பவர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் அதன் அருகாமையில் உள்ள ஓர் நீர் முனையத்தில் ஒரு மிதவை டிராகன் மிகப்பெரிய அளவில் ஒளிரும் வண்ணங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரின் கண்களை கவர்ந்தது.

இப்படி உணர்ச்சிப் பெருக்குடன் உள்ளத்தின் செருக்குடன் திரள் திரளாக முதல் தேசிய தினத்திலேயே மக்கள் கலந்துகொண்டனர். சுமார் 23,000 பேர் ஆண்களும் பெண்களும் இணைந்து சிங்கப்பூரின் முதல் தேசிய தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நமது தேசம் நமது பெருமை நமது மக்கள் என்ற பெருமிதத்தோடும் எதிர்கால உயர்வுக்கு உறுதுணையாக நிற்போம் என்ற மன உறுதியோடும் சுமார் 23,000 பேர் கொண்டாட்டத்தில் பூரித்தனர்.

பிரதானமாக நடைபெறும் அணிவகுப்பை தவிர கலாச்சார நிகழ்ச்சிகள், இரவு உணவுகள், உரைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் என அனைத்தும் நடைபெற்றன.

Photo Courtesy : Ministry of Information and the Arts Collection, courtesy of National Archives of Singapore.

Related posts