TamilSaaga

“பெரும் அழுத்தத்தில் சிங்கப்பூர் மருத்துவமனை வார்டுகள்” – இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சுகாதார அமைச்சர்

சிங்கப்பூரில் விபத்து மற்றும் அவசரநிலை (A&E) துறைகள் மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உள்ள பொது வார்டுகள் நிரம்பி வருகின்றன என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், திரு. ஓங், இளைய மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை வீட்டிலிருந்து குணமடைய MOH ஊக்குவிப்பதாகக் கூறினார்.

ஏனென்றால், 98 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் “லேசான அல்லது அறிகுறிகள் அற்ற” நிலையில் குணமடையும் வரை மருத்துவமனைகளில் இருக்கின்றனர்” என்று திரு. ஓங் கூறினார். மேலும் MOH மருத்துவமனைகளுக்குப் பதிலாக நோயாளிகளை சமூகப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கிறது என்றார் அவர். மேலும் வரவிருக்கும் வாரத்தில் மேலும் பல சமூகப் பராமரிப்பு வசதிகளை அமைக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நமது மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக சுமைகளை சுமக்க முடியாது. இந்த நேரத்தில், இது MOHன் மிகப்பெரிய சவாலாக இருந்துவருகின்றது. இதைத் தீர்க்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று அவர் கூறினார். சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக 1000க்கும் அதிகமான அளவில் தினசரி தொற்று பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. MOH கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு மீட்புத் திட்டத்தை 50 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களுக்கு விரிவாக்கப்படும் என்று தெரிவித்தது.

மேலும் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற, பெருந்தொற்றல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 12 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களாகவும், முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாகவும் மேலும் கடுமையான நோய்கள் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும் கழிவறையோடு கூடிய தனிமைப்படுத்திக்கொள்ளும் அரை ஒன்று இருந்தால் அவர்கள் வீட்டு தனிமைக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் போன்ற 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அல்லது பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களும் இருக்கக்கூடாது.

எனவே மேற்குறிப்பிட்ட இந்த திட்டத்தின் கீழ், தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்து, இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நபர்கள் மருத்துவமனை அல்லது சமூக பராமரிப்பு வசதிக்கு கொண்டு செல்லப்படாமல், உடனடியாக வீட்டு மீட்புத் திட்டத்தை தொடங்கலாம்.

Related posts