TamilSaaga

Budget 2022: சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களை “வேற லெவலுக்கு” கொண்டு செல்லும் “company training committee” – இது உண்மையில் “தூள்” அறிவிப்பு

Singapore: இங்குள்ள தொழிலாளர்கள் மறுதிறன் மற்றும் திறன்மிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக, உறுதியான பயிற்சி மற்றும் உருமாற்ற திட்டங்களை செயல்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் முயற்சிகளை அதிகரிக்க அரசாங்கம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது என்று இன்று அறிவிக்கப்பட்டு வரும் சிங்கப்பூர் 2022-க்கான பட்ஜெட்டில் அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (பிப். 18) தனது பட்ஜெட் உரையில், பணத்தின் ஒரு பகுதி புதிய மானியமாக நிறுவங்களுக்கு கொடுக்கப்படும். இதன் மூலம், அந்நிறுவனங்கள் தங்களின் புதிய திட்டங்களை அமல்படுத்த company training committees-களை அமல்படுத்த முடியும் என்றார். அதாவது, இந்த company training committees மூலம் நிறுவனங்களும் பயன்பெறும், அதில் பணிபுரியும் தனி நபர்களும் (ஊழியர்கள்) பயன் பெற முடியும்.

மேலும், இத்தகைய குழுக்களை அமைக்க இங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் National Trades Union Congress (NTUC) மூலம் இந்தப் புதிய மானியம் நிர்வகிக்கப்படும் என்றார்.

நிறுவனத்தின் பயிற்சிக் குழுக்களில் (Company training committees) ஒரு நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இடம்பெறுவார்கள். நிறுவனத்தின் தற்போதைய பயிற்சித் திட்டங்களை மதிப்பாய்வு செய்வது, திறன் இடைவெளிகளைக் கண்டறிதல், அவர்களின் பணியாளர்களுக்கான மறுதிறன் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான திட்டமிடல் மற்றும் புதிய பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை அவர்களின் பணியாகும். உண்மையில் இது ஒரு நல்ல முயற்சி தான்.

மேலும் படிக்க – “சபாஷ்!”.. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இனி விடிவு காலம்.. 500 மில்லியன் ஒதுக்கீடு – சிங்கப்பூர் பட்ஜெட் 2022-ல் “சூப்பர்” அறிவிப்பு

2019 ஆம் ஆண்டில் நிறுவனப் பயிற்சிக் குழு மாதிரி (company training committee model) அறிமுகப்படுத்தப்பட்ட போது, சுமார் 330,000 தொழிலாளர்களுக்கு உதவ, மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற 1,000 குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக NTUC கூறியது. (சபாஷ்!)

இன்றுவரை, பல்வேறு அளவுகளில் நிறுவனங்களில் 800க்கும் மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (original target) விடக் குறைவு தான்.

இதுகுறித்து அமைச்சர் வோங் கூறுகையில், “நம் மக்களின் மீது செய்யப்படும் முதலீடுகளை அதிகரிக்க, தொழில்துறையால் கோரப்படும் திறன்களுக்கும் பணியாளர்களால் வழங்கப்படும் திறன்களுக்கும் இடையே ஒரு நல்ல பொருத்தத்தை (good match) நாம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்றார்

இதன் அர்த்தம் என்னவெனில், புதிய திறன்கள் (new skills) எங்கு தேவைப்படுகின்றன என்பதை முன்னறிவிப்பதற்கும், பயனுள்ள பயிற்சி சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் முதலாளிகள், வேலை தேடுபவர்கள், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்குநர்களை ஒன்றிணைப்பதாகும். வேலை தேடுபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ள விஷயமாக அமையும்.

தொழில்நுட்பத்தை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கும், தொழிலாளர்களின் மேம்படுத்தப்பட்ட திறன்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் முதலாளிகள் வேலைகளை மறுவடிவமைப்பு (redesign jobs) செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

NTUC இன் நிறுவனப் பயிற்சிக் குழு மாதிரியானது தொழிற்சங்கங்களையும் முதலாளிகளையும் ஒன்றிணைத்து உறுதியான நிறுவன-நிலை மாற்றத் திட்டங்களை உருவாக்குகிறது, தேவையான பொருத்தமான பயிற்சி உட்பட, தொழிலாளர்கள் சிறந்த ஊதியம், நலன் மற்றும் வாய்ப்புகளை அனுபவிக்க முடியும் என்று அமைச்சர் வோங் கூறினார்.

மேலும் படிக்க – Budget 2022: ஆரம்பமே அதிரடி! 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதல் தள்ளுபடி.. $100 CDC வவுச்சர்கள் அறிவிப்பு

அத்தகைய திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் வோங் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி, “NTUC இன்னும் பலவற்றைச் செய்ய விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

துப்புரவு சேவை நிறுவனமான Speco, சிங்கப்பூர் நிறுவன பயிற்சிக் குழு (company training committee) மூலம் பயனடைந்த ஒரு நிறுவனமாக அமைச்சர் உதாரணம் காட்டினார் பேசினார்.

Speco ஊழியர்களில் ஒருவரான திரு ஷம்சுல் நூர்ஹகிம் (வயது 22), ஒரு work-study programme-ல் சேர்ந்து, இப்போது ஸ்பெகோ நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் Republic Polytechnic-ல் applied science கோர்ஸில் டிப்ளமோ பாடங்கள் எடுக்கிறார்.

“company training committee ஆதரவின் மூலம், அவர் புதிய திறன்களைப் பெற்றுள்ளார், மேலும் அவரது வாழ்க்கையிலும் அவர் சிறந்து விளங்குவார்” என்று அமைச்சர் வோங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts