TamilSaaga

பிரிட்டனின் கைவிலங்கை உடைத்தெறிந்த சிங்கப்பூர் – குடியரசு நாடானது எப்படி?

சிங்கப்பூர் வரலாற்றை மன்னர் ஆட்சி காலத்துக்கு புரட்டிப்பார்த்தால் 14 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சிங்கப்பூர் மலேசியா ஆகியவை கடாரம் கொண்ட சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலமாக இருந்திருக்கிறது. வரலாற்று காலங்களிலே தென்கிழக்கு ஆசியாவின் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியதற்கான பல சான்றுகள் காணப்படுகின்றன. 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் “சிங்கப்பூரா” என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்கு முன்பாக “துமாசிக்” என்ற பெயரே வழக்கத்தில் இருந்துள்ளது.

நவீன சிங்கப்பூரின் வரலாற்றை பொருத்தவரை தென்கிழக்கு ஆசியாவின் தீவு நாடாக இருக்கிறது. ஜோகூர் நீர்சந்தி மற்றும் சிங்கப்பூர் நீர்சந்தி ஆகியவற்றின் மூலம் மலேசியா மற்றும் இந்தோனிசியாவை பிரிக்கிறது.

ஜோகூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சிங்கப்பூர் பின்பு அவரது அனுமதியுடன் 1819 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக மாறியது. பிறகு பிரிட்டன் தனது நேரடி ஆட்சியை 1824 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் மீது செலுத்தியது.

தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டனின் குடியேற்ற நாடாக 1826 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூரானது சில காலம் ஜப்பானியர்களின் ஆதிகத்துக்கு உள்ளானது.

இப்படியாக சிங்கப்பூர் பிரிட்டன் மற்றும் ஜப்பானியர்களின் கைவிலங்கில் சிக்கிகொண்டு இருந்த நாட்களில் 1945 ஆண்டுகளில் மீண்டும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டுவரப்பட்டது. அந்த சூழலில் தான் 1963 ஆம் ஆண்டு பிரட்டனின் குடியேற்றமாக இருந்த மற்ற பகுதிகள் மற்றும் மலேசியாவுடன் இணைந்து கைவிலங்கை உடைத்து விடுதலை அடைந்தது.

ஆங்கிலேயர் இடமிருந்து விடுதலை பெற்றதோடு மட்டும் நில்லாமல் 1966 ஆம் ஆண்டில் மலேசியாவில் இருந்து பிரிந்து தனி குடியரசு நாடாக உருவானது சிங்கப்பூர்.

Related posts