TamilSaaga

மூடப்பட்டது KTV Lounge – யாரென தெரியாத வியட்னாமிய பெண்களுக்கு தொற்று

சிங்கப்பூர் கொரோனா நோய் தொற்று அவ்வப்போது அதிகரித்து வரும் ஒரு சூழலில் இந்த தொற்றுப்பரவல் தொகுதியில் தற்போது ஒரு Karoke ஓய்வறையும் சேர்ந்துள்ளது.

இந்த ஓய்வறைகளில் ஒன்று கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்காகவும் பாதுகாப்பு நடைமுறைகளை ஆராய்ந்து சரிசெய்வதற்காகவும் தற்போது மூடப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானக்கடையாக செயல்படும் சுப்ரீம் கேடிவி அடுத்த சில தினங்களுக்கு மூடப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அதன் மேலாளர் திரு லீ அவர்கள் கூறியுள்ளார்.

இதை தவிற இங்குள்ள Far East விற்பனை மையமானது வியட்னாமிய சமூக தொற்றுத் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. ஜீலை.13 செவ்வாய்க்கிழமை வரை இந்த தொற்றுத் தொகுதியில் 8 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொற்றானது வியட்னாமிய சமூகப் பணிப் பெண்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. “அந்த வியட்னாமிய பெண்கள் யாரென்று தெரியவில்லை அனைவரையும் கடைக்கு அனுமதிக்கிறோம் அதில் அவர்கள் யாரென தெரியவில்லை” என மேலாளர் லீ கூறியுள்ளார்.

மேலும் இதை பற்றி மேலாளர் திரு லீ கூறும்போது, “நாங்கள் எல்லா வகையிலும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். இனி மேலும் பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த உள்ளோம். இதில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவை கடினமாக பின்பற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

மொத்தமாக சுப்ரீம் கேடிவியை சேர்ந்த ஏழு பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கேடிவி ஓய்வறை தொடர்புடைய இடங்களுக்கு ஜூன்.29 முதல் ஜீலை 12 இடையிலான நாட்களில் சென்று வந்தவர்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை செய்யப்படுகிறது. அதில் அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளலாம் எனவும் வியாட்னாமிய சமூக தொற்றுடன் ஏதேனும் தொடர்பு இருப்பதாக நினைப்பவர்களும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts