TamilSaaga

சிங்கப்பூரில் நடந்த செஸ் போட்டி! வரலாறு படைத்த நம்ம வீட்டுப் பிள்ளை!

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

2023-2024 வது வருடத்தின் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங்-ஐ வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். டிங் இதற்க்கு முன் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர செஸ் ஒலிம்பியாட் போன்ற பல விளையாட்டுகளில் அவர் வென்று உலக அளவில் 2728-வது ரேங்கிங்-ல் உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த குகேஷ், தனது 12 வது வயதில் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். படிப்படியாக உயர்ந்து தனது 17 வது வயதில் உலக அளவில் 2750 வது ரேங்கிங்-ல் இடம்பிடித்தார்.  12 வயதிற்கு கீழ் உள்ளோருக்கான உலக செஸ் சாம்பியன் பட்டம், ஆசிய வாலிபர் செஸ் சாம்பியன், ஒலிம்பியாட் போன்ற பல விளையாட்டுகளில் வென்றுள்ளார். உலகிலேயே குறைந்த வயதில் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ஆன இரண்டாவது நபராக குகேஷ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் அதாவது 2024-2025-க்கான உலக செஸ் சாம்பியன் விளையாட்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் டிங் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார், பிறகு குகேஷ் 3வது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அடுத்த 7 விளையாட்டுகளும்  இப்படி டிரா-வில் முடிந்த நிலையில் இறுதியில் குகேஷ் வெற்றி பெற்றார், ஆனால் உடனடியாக அடுத்த ஆட்டத்தில் அவர் மீண்டும் தோற்றார். இறுதியில் டிங் செய்த சிறிய தவறை சரியாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ் விளையாட்டில் வெற்றி பெற்றார்.

18 வயதில் 18 வது உலக சாம்பியன் பட்டம், உலகிலேயே இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் க்ராண்ட் மாஸ்டர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த குகேஷ், நாடு திரும்பிய பொழுது சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தனர். மேலும் இந்த வெற்றியைக் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதாவது, செஸ் உலக சாம்பியன்ஷிப் வென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். பலருக்கும் இது போன்ற கனவு நினைவாவதில்லை. நான் அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்”. மேலும் அவர் தனது எதிர் போட்டியாளரான டிங் மற்றும் அவரது விளையாட்டைக் குறித்தும் மிகவும் பெருமையாக பேசினார். அவர் மேல் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தது. நிச்சயம் அது அவருக்கு பாரமாக இருந்திருக்கும். அவரது விடாமுயற்சிக்கு எங்கள் மிகக் கடினமான விளையாட்டே சாட்சியாகும். அவர் சிறந்த வீரர் அவரை நான் மிகவும் மதிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தனது குடும்பம் தான் இந்த பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், அவர்கள் தான் தனது வெற்றிக்கு முதல் காரணம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தனது பள்ளிக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். சிறு வயதில் சம்மர் கேம்ப்-ல் இருந்து தான் தனது செஸ் பயணம் துவங்கியதாகவும் இது வரை அதற்காக தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விளையாட்டின் பொழுது டிங்  எழுந்து சென்ற போதும் உணர்ச்சி மிகுதியால் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் குகேஷ் அமர்ந்திருந்தார். மேலும் அவரது தந்தை வெளியில் இருக்கும்பொழுது, வெற்றியுடன் வந்து அவரை ஆரத் தழுவிக் கொண்டது அங்கு இருந்தவர்களையும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கச் செய்தது.

இப்படி இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை புரிந்த குகேஷ்-க்கு நாடு முழுவவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts