சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் (NParks) இந்த ஆண்டு மொத்தம் 4,00,000 விதை பாக்கெட்டுகளை (சமையலுக்கு பயன்படும் செடிகள்) விநியோகிக்கும். மேலும் இதற்காக தோட்டக்காரர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10) காலை 10 மணி முதல் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய ஆரம்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதை வழங்கும் நிகழ்வு கடந்த ஜூன் 2020ல் தொடங்கப்பட்டது என்றும், மேலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 8,60,000கும் மேற்பட்ட விதைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் Npark தெரிவித்தது.
Gardening With Edibles என்று இந்த திட்டம் குறித்த பல தகவல்களை இன்று அக்டோபர் 9ம் தேதி சிங்கப்பூர் கார்டன் ஃபெஸ்டிவல் ஹார்டிகல்ச்சர் ஷோ (SGF ஹார்ட் ஷோ) துவக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோட்டக்கலை திட்டம் பொதுமக்களை வீட்டிலோ அல்லது சமூகத்திலோ மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டங்களிலோ, தோட்டம் போடுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் 30 சதவிகித ஊட்டச்சத்து தேவைகளை உற்பத்தி செய்யும் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு இலக்குடன் இது இணைந்துள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இன்று சனிக்கிழமை காலை SGF ஹார்ட் ஷோவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை சிங்கப்பூரின் வீதிகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், மனித ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பயனளிக்கும் என்று கூறினார்.
சமையல் செடிகளை வளர்ப்பது, மக்கள் தங்கள் உணவில் தாங்கள் விளைவித்த பொருட்களை அனுபவிக்க அனுமதிக்கும் என்றும் திரு லீ கூறினார்: “அவ்வாறு செய்வதன் மூலம், உணவின் மதிப்பு மற்றும் நமது உள்ளூர் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் செய்யும் கடின உழைப்பு பற்றி நாம் அதிக விழிப்புணர்வு பெற முடியும்.” என்றார் அவர்.