TamilSaaga

வேறுபாடுகள் காணாமல் சிங்கப்பூர் மக்களை அரவணைக்கும் வழிபாட்டுத்தலங்கள் – பிரதமர் லீ பெருமிதம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லூங் அவர்கள் சிலாட் நகரிக் உள்ள சீக்கிய குருத்வாரா கோயிலின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்த கோயிலானது புதுப்பிக்கப்பட்டு தற்போது திறப்பு விழா நடத்தப்பட்டது.

இன சமய மத வேறுபாடுகளை கடந்து சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைக்க வழிபாட்டுத் தலங்கள் பெருமளவில் பங்கு வகிக்கின்றன.

கொரோனா காலத்தில் சீக்கிய கோயில்கள் மூலம் 1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் சைவ உணவு சமைத்து வழங்கி வருவதை பிரதமர் லீ அவர்கள் பாராட்டினார்.

சிங்கப்பூரின் மற்ற ஆலயங்கள் போல சிலாட் நகர் குருத்வாரா ஆலயமும் கொரோனாவால் ஏற்பட்ட இன்னல்களை குறைக்கும் வகையில் பல உதவிகளை செய்து வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

பக்தர்கள் வீட்டிலிருந்தே வழிபட இணையத்தில் வழிபாட்டு சேவைகளை நடத்தியது எனவும் பேசினார்.

சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமையோடு ஐக்கியமாக வாழ்வதில் வழிபாட்டுத் தலங்கள் பெரிய பங்கு வகிப்பதாக பெருமிதம் கொண்டார்.

Related posts