TamilSaaga

‘சிங்கப்பூரில் மீண்டும் அமலுக்கு வரும் தடை’ : எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை – Full Report

சிங்கப்பூரில் பெருகிவரும் பெருந்தொற்று பரவல் காரணமாக மீண்டும் இரண்டாம் கட்ட High Alert விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உணவகங்களில் இனி அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்படமாட்டாது.

இருப்பினும் உணவகங்களில் பார்சல் மட்டும் டெலிவரி சர்வீசுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் சமூக ஒன்று கூடல்களில் 2 பேர் வரை மட்டுமே ஒன்று கூடலாம். மேலும் வீட்டிற்குள் நடக்கின்ற விசேஷங்களில் இருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். சொகு படகு சவாரி, அருங்காட்சியகம் மற்றும் பொது நூலகங்கள் 25 சதவீத மக்கள் திறனுடன் தொடர்ந்து செயல்படலாம்.

குழுவாக சுற்றுலா செல்பவர்கள் ஒரு குழுவிற்கு 20 பேர் மிகாமல் செல்லவேண்டும். மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையே பிரதானமாக கடைபிடிக்கப்படும். மேலும் உடற்பயிற்சி நிலையங்களில் உட்புறத்தில் முகக்கவசம் இன்றி உடற்பயிற்சி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் PET பரிசோதனை மேற்கொண்டவர்கள் 100 பேர் வரை திருமண விழாக்களில் கலந்து கொள்ளலாம். அதேபோல PET சோதனை எடுக்காதவர்கள் 50 பேர் வரை ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் இறுதிசண்டங்குகளில் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

மேலும் இந்த தடை வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை அமலில் இருக்கும்

Related posts