TamilSaaga

இலவச Oximeter கருவியை தவறவிட்ட மக்கள் – கைவிரித்த Temasek நிறுவனம்

சிங்கபூரை சேர்ந்த Temasek Foundation நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு Oximeter கருவி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. ஜீலை 3ம் தேதிக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் அனுப்பப்படும் அதனை வைத்து இலவச Oximeter கருவியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இதனை நீங்கள் Fairprice, Shengsiong, Giant, Cold stoarage, Watsons, Unity மற்றும் Guardian ஆகிய அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. மேற்கண்ட கடைகளின் அனைத்து கிளைகளும் இலவச கருவி பெறும் மையங்கள் கிடையாது. உங்கள் பகுதியில் எந்த மையத்தில் கிடைக்கும் என்பதை Temasek Foundation நிறுவனத்தின் முகநூல் பதிவில் உள்ள இணையதள முகவரியில் உங்கள் போஸ்டல் எண்ணை (Postal Code) உள்ளீடு செய்து தேடி தெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் மக்கள் பலர் அந்த தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறிவருகின்றனர். மேலும் அந்த துண்டு பிரசுரத்தை சிலர் தூக்கியெறிந்து விட்டதாகவும் கூறினார். இதனால் தங்களுக்கு மீண்டும் அந்த கருவியை பெற துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த குழப்பத்திற்கு தனது முகநூல் வழியாக பதில் அளித்துள்ள Temasek Foundation நிறுவனம் இந்த சிக்கலில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts