TamilSaaga

“FINA உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்” : பங்கேற்ற 4 சிங்கப்பூர் நீச்சல் வீரர்களுக்கு தொற்று – போட்டியிட முடியாமல் தவிப்பு

ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையக கொண்டு செயல்படும் நீச்சல் கூட்டமைப்பு தான் FINA. இந்த FINA நடத்தும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2021ம் ஆண்டுக்கான இதில் 25 மீ நீச்சல் போட்டி தற்போது அபுதாபியில் நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள நமது நான்கு சிங்கப்பூர் நீச்சல் வீரர்கள் பெருந்தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நீச்சல் சங்கம் (SSA) நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “மேலும் ஒரு சாங்கி விமான நிலைய ஊழியருக்கு தொற்று”

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சிங்கப்பூரின் மற்ற குழுவினர் நேர்மறை வழக்குகளின் நெருங்கிய தொடர்புகளாகக் கருதப்படுவதால், அணியின் நீச்சல் வீரர்கள் யாரும் தற்போது போட்டியிட முடியாத நிலை உள்ளது. அபுதாபியில் நடைபெற்ற FINA உலக சாம்பியன்ஷிப் (25 மீ) 2021-ல் பங்கேற்ற எங்கள் 14 நீச்சல் வீரர்களில் நான்கு பேருக்கு செய்யப்பட்ட PCR சோதனையைத் தொடர்ந்து தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததாக FINA மூலம் சிங்கப்பூர் நீச்சல் சங்கம் SSA தெரிவித்துள்ளது.

“SSA அமைப்பு நீச்சல் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. எங்கள் நீச்சல் வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கவனித்துக்கொள்வதை உறுதிசெய்ய தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம் என்றும் SSA தெரிவித்துள்ளது”. பாதிக்கப்பட்ட நீச்சல் வீரர்கள் பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர், மீதமுள்ள குழு உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் SSA மேலும் கூறியது.

FINA போட்டிக்காக கடந்த டிசம்பர் 12 அன்று இரவு அபுதாபிக்கு வருவதற்கு முன், சிங்கப்பூரின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சோதனை செய்தபோது அனைவரும் எதிர்மறையான நிலையில் தான் இருந்தனர், என்று CNA நிருவனத்தின் கேள்விக்கு SSA பதிலளித்தது. நேர்மறை சோதனை செய்த நான்கு நீச்சல் வீரர்களில் அனைவருக்கும் நல்ல உடல்நலத்தில் உள்ளனர் என்று SSA தெரிவித்துள்ளது. மூவர் அறிகுறியற்றவர்களாக உள்ள நிலையில், ஒருவருக்கு இருமல், காய்ச்சல் மற்றும் “வாசனை மற்றும் சுவை இழப்பு” உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts