சிங்கப்பூர் புங்கோலில் உள்ள வாட்டர்வே பாயின்ட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே சைக்கிளில் சென்ற கிராப் ஃபுட் டெலிவரி நபரை ஒரு தம்பதியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அடிப்பதை தடுக்க அந்த டெலிவரி செய்யும் நபர் தனது கையை உயர்த்திய போதும் அவர்கள் அவரது முகத்திலும் வயிற்றிலும் தொடர்ந்து அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் அவருக்கு மூக்கில் காயங்களும், கையில் சிராய்ப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று செவ்வாயன்று (நவம்பர் 30) இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வான் ஃபரா ஷிரீன் அபு ஹாசன் என்ற 33 வயது பெண்ணுக்கு நான்கு மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது தானாக முன்வந்து காயப்படுத்தியது மற்றும் தனக்குச் சொந்தமில்லாத டெபிட் கார்டைப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. துன்புறுத்துதல் உள்ளிட்ட மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
மேலும் அந்த பெண்ணின் அப்போதைய காதலன், 40 வயதான அலோசியஸ் ஹோ வெய் பெங், கடந்த ஆகஸ்ட் 31 அன்று, பொது இடத்தில் சண்டையிட்டதற்காகவும், தாக்குதலுக்காகவும், மூன்று வாரங்கள் சிறைத்தண்டனையும் 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, சிங்கப்பூர் தம்பதியினர் இரவு 7.30 மணியளவில் வாட்டர்வே பாயின்ட்டின் இணைப்புப் பாலத்தில் நடந்து கொண்டிருந்தபோது, கிராப் ஃபுட் டெலிவரி செய்பரான டேனியல் சீ (வயது 31), அவர்களுக்கிடையே சென்றார்.
இதனையடுத்து அந்த பெண் அந்த டெலிவரி நபரை பார்த்து கத்தினார், உடனடியாக திரு சீ தனது மிதிவண்டியில் இருந்து இறங்கி, ஏன் அந்த பெண் இப்படு சத்தமிடுகிறாள் அவளுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்றும் கேட்டான் என்று துணை அரசு வழக்கறிஞர் டாப்னே ஜஸ்ரீன் சீ கூறினார். உடனடியாக அந்த பெண் அவனை திட்டிவிட்டு அவனை தாக்க முற்பட்டுள்ளார். இந்த சமத்துவத்தை பார்த்த மாலில் இருந்து ஒரு பாதுகாப்பு அதிகாரி இந்த தகராறை தடுக்க வந்தார், ஆனால் ஃபரா தொடர்ந்து திரு சீயின் முகத்தில் குத்தினார், இதனால் அவரது மூக்கில் இரத்தம் வந்தது. இந்த தாக்குதல் சம்பவம் இணைப்பு பாலத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு திரு சீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.