TamilSaaga

விமான பணிப்பெண்ணை பின்னால் தட்டிய சக ஊழியர்” : கடுப்பான பெண்ணிடம் கூலாக பதில் சொன்ன ஆசாமி

சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குச் சென்ற விமானத்தில் ஒரு மூத்த விமானப் பணியாளர் ஒருவர் தனது 27 வயது சக பெண் ஊழியரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 17) அன்று வழக்கு விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று CNA தெரிவித்துள்ளது. மதர்ஷிப் கண்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதான சிங்கப்பூர் நபர், அவர் அந்த விமானத்தில் இருந்த மூத்த கேபின் பணியாளர் ஆவார்.

இதையும் படியுங்கள் : “இனி அப்படி செய்யமாட்டேன், என்னை மன்னியுங்கள்” : வருத்தப்பட்ட நெட்டிசன்கள் – Open Statement கொடுத்த பிரபலம்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் GAG ஆர்டர்கள் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயரைச் வெளியிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.விமான நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களும் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து திருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மே 3, 2019 அன்று சிங்கப்பூரில் இருந்து மணிலாவுக்கு திரும்பும் விமானத்தில் இருந்தனர். மேலும் இந்த சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் வணிக வகுப்பு பயணி ஒருவருக்கு சேவைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அந்த பயணியை நோக்கி சற்று சாய்ந்த நிலையில் நின்றுகொண்டிருந்த அந்த பணிப்பெண் தீடீரென்று யாரோ தனது பின்னால் பலமாக தட்டியதை உணர்ந்தார். திடுக்கிட அவர் திரும்பிப்பார்த்தபோது அந்த குற்றம்சாட்டப்பட்ட 50 வயது நபர் அவரை கடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை தவிர அங்கு வேறு யாருமில்லை.

அப்போது அந்த பணிப்பெண்ணை நோக்கி திரும்பி பார்த்த அந்த நபர் நீ நிற்பது முறையாக இல்லை என்பதால் தான் அவ்வாறு செய்தேன். அதை தவிர வேறு எந்த உள்நோக்கத்துடனும் நான் அவ்வரும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை அந்த பணிப்பெண் விமான கேப்டனிடம் கூற அவரும் அந்த நபரை அழைத்து விசாரிக்க மேற்குறிய அதே பதிலை கூறியுள்ளார். இதனையடுத்து மே 5 2019 அன்று அந்த பணிப்பெண் சிங்கப்பூர் திரும்பியபோது போலீசில் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் ஆஜரான அந்த ஆடவர் தான் அவரை நேராக நிற்பதற்காகத்தான் அவ்வாறு பின்னால் அடித்ததாகவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Jurong West பகுதியில் தீ” : 45 பேர் வெளியேற்றம், 5 பேர் மருத்துவமனையில் – எங்கு தீ பிடித்தது?

தற்போது இந்த வழக்கு வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது மூன்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து வழங்கப்படலாம். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 50 வயதாகிவிட்டதால், அவருக்கு பிரம்படி விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts