TamilSaaga

சிங்கப்பூர்.. “Work Pass Holders” விவகாரம் : 175 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த MOM – என்ன காரணம்?

சிங்கப்பூரை பொறுத்தவரை அவசரகாலத் தொடர்புத் தடமறிதல் போன்ற சந்தர்ப்பங்களில் Work Pass வைத்திருப்பவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. ஆனால் சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 900க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் குடியிருப்பு முகவரிகளை உடனடியாக புதுப்பிக்கத் தவறியதற்காக 175 நிறுவனங்களுக்கு மொத்தம் $1.1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

“சிங்கப்பூரில் டைனோசரை பார்க்கலாம்” : Jurassic இல்ல இனி Jewel-rassic – மெருகேறும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்

மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று புதன்கிழமை (ஜனவரி 26) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனங்கள் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும் மேற்குறிப்பிட்ட அந்த தவறை செய்துள்ளன என்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகவே ஒவ்வொரு Work Pass வைத்திருப்பவருக்கும் அந்த நிறுவனங்களுக்கு $500 முதல் $2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு (Work Pass) விதிமுறைகளின் கீழ், MOMன் ஆன்லைன் வெளிநாட்டு பணியாளர் முகவரி சேவை அமைப்பின் மூலம், பணியமர்த்துபவர்கள், தங்கள் Work Pass வைத்திருப்பவர்களின் குடியிருப்பு முகவரிகளை அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல அவர்களின் குடியிருப்பு முகவரிகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த தொழிலாளி இடம்பெயர்ந்த ஐந்து நாட்களுக்குள் கணினியில் Update செய்யப்பட வேண்டும்.

“இந்தத் தகவலின் துல்லியம், பணி அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கும், பொது சுகாதாரம் அல்லது அவசரகால தொடர்புத் தடமறிதல் நோக்கங்களுக்காகவும் முக்கியமானது” என்று MOM செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுடன் வழக்கமான தொடர்பைப் பேண ஊக்குவிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் சொந்தமாக வேறு முகவரிக்கு மாறினால், நிறுவனத்திடம் புதுப்பித்துக் கொள்ளும்படி தங்கள் தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று MOM செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ‘ஊதிய உயர்வு’ நடைமுறை சரியா? “360 Degree Feedback” முறை நல்லதா?

ஆன்லைன் அமைப்பில் தங்கள் தொழிலாளர்களின் குடியிருப்பு முகவரிகளை உடனடியாக புதுப்பிக்கத் தவறும் முதலாளிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று MOM எச்சரித்துள்ளது. வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துதல் விதிமுறைகளுக்கு இணங்காதவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். “இந்த நினைவூட்டலுக்குச் செவிசாய்க்குமாறு பணிப் பாஸ் வைத்திருப்பவர்களின் அனைத்து முதலாளிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று MOM தெரிவித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts