TamilSaaga

“மெட்டி ஒலி” சீரியல் புகழ் நடிகை உமா மகேஷ்வரி காலமானார்.. இது தான் காரணமா? – அதிர்ச்சித் தகவல்

புகழ்பெற்ற “மெட்டி ஒலி” சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த உமா மகேஷ்வரி நேற்று காலாமானார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதான அவரின் இறப்பிற்கு சின்னத்திரை உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை பிரபலமாக இருந்த சன் டீவியின் மெட்டி ஒலி சீரியலில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவி, உமா மகேஸ்வரி, விஷ்வா போன்ற பலரும் நடித்திருந்தினர்.

மக்களிடம் பெரிய வரவேற்பையும் இந்த சீரியல் பெற்றது. குறிப்பாக உமா மகேஷ்வரி அவர்களுக்கு ரசிகர்கள் இந்த சீரியலில் அதிகம்.

இதை தொடர்ந்து அவர் வெற்றிக் கொடிகட்டு, அல்லு அர்ஜுனா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார்.

தனது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. ஏற்கனவே ஒரு முறை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமான அவர் சமீபத்தில் மீண்டும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று அவர் உயிரிழந்த செய்தி வந்துள்ளது. சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கள்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts