TamilSaaga

சிங்கப்பூர்..டம்பைன்ஸ் ஹாக்கர் மையத்தில் “தீடீர் தீ” : விரைந்து வந்த குடிமைத் தற்காப்புப் படை

சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) பிற்பகல் 823 A டேம்பைன்ஸ் ஸ்ட்ரீட் 81ல் உள்ள ஒரு வியாபார மையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) இன்று பிற்பகல் 2.45 மணியளவில் தீ பரவல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

இன்று பிற்பகல் 2.20 மணியளவில் பல சத்தமான வெடிப்புகள் கேட்டதாக சம்பத்தை கண்ணால் சாட்சிகள் CNAவிடம் தெரிவித்துள்ளனர். ஸ்டால் உரிமையாளர் எடுத்த வீடியோவில், ஹாக்கர் சென்டர் உள்ளே தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளை நம்மால் பார்க்கமுடிந்தது. மீன் சூப் கடையின் உதவியாளர் தீயைக் கவனித்தபோது, ​​அவர் அதன் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார், ஆனால் தீ வேகமாக கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது.

ஹாக்கர் சென்டருக்கு அருகிலுள்ள கேஎஃப்சி உணவகத்தின் ஊழியர்கள் CNAவிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர்கள் எரிவாயு கசியும் வாசனையை உணர்ந்து ஓடியதாகவும் அந்த நேரத்தில் உணவகத்திற்குள் வாடிக்கையாளர்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பிற்பகல் 2.45 மணியளவில் இருந்து தீயணைப்பு நடவடிக்கைகளை நடத்துவதாகக் கூறியது. தீ பரவல் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts