TamilSaaga

“ஆக்சன் கிங்” அர்ஜுன் தொகுத்து வழங்கும் Survivor – வெளியான போட்டியாளர்கள் பட்டியல்

தமிழ் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் “சர்வைவர்”. சாகசங்களை அடிப்படியாக கொண்ட இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார் என்பது இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு களங்களில் இருந்து பல போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உயிர்வாழ தேவையான ஆதாரங்களை குறைந்த அளவில் கொண்ட தொலைதூர தீவில் 18 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தனியாக இருப்பார்கள். போட்டியாளர்கள் அதை எதிர்த்துப் போராடி தங்கள் ஆடம்பரத் தேவைகளை சம்பாதிக்க பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டும் மற்றும் எலிமினேஷனில் இருந்தும் தப்பிக்க வேண்டும். இது தான் இந்த Survivor நிகழ்ச்சி.

தற்போது இந்த போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களை பற்றி காணலாம்.

நடிகை விஜயலக்ஷ்மி :

பிரபல நடிகையான விஜயலக்ஷ்மி, வெங்கட் பிரபு அவர்களின் சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் பிரபல இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி புகழ் கனி இவருடைய சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிக் பாஸ் 2 போட்டியில் பங்கேற்ற விஜயலக்ஷ்மி தயாரிப்பாளராகும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் நந்தா துரைராஜ்

தமிழ் சினிமாவின் மிகசிறந்த குணச்சித்திர நடிகராக வலம்வருபவர் தான் நந்தா. கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் 2002ம் ஆண்டு வெளியான சூர்யாவின் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இறுதியாக இவர் நடிப்பில் இந்த ஆண்டு பரமபதம் விளையாட்டு என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ராந்த்

தளபதி விஜய் அவர்களின் உறவினரான விக்ராந்த் 1991ம் ஆண்டு வெளியான மம்மூட்டி அவர்களின் அழகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமானார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை ஸ்ருதி டாங்கே

காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஸ்ருதி, நாயகியாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் இவர் பல படங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இறுதியாக விஷாலின் சக்ரா படத்தில் நடித்திருந்தார்.

தொகுப்பாளினி பார்வதி

பார்வதி தனது வாழ்க்கையை நிகழ்ச்சி தொகுப்பாளினியனாக தொடங்கியவர். தனது வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் சிறுது காலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பெசன்ட் ரவி

பல படங்களில் வில்லனாக தோன்றிய இவர் ஒரு தலை சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் என்பது கோலிவுட் அறிந்ததே. 1995ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட கார்த்திக் அவர்களின் லக்கி மேன் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரவி.

நடிகர் உமாபதி ராமையா

2017ம் ஆண்டு வெளியான “அதாகப்பட்டது மஹாஜனங்களே” என்ற படத்தின் மூலம் நடிகராக இவர் அறிமுகமானார். இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான திருமனம் என்ற படத்தில் நடித்தார். மேலும் பிரபல நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை காயத்திரி ரெட்டி

தளபதி விஜய் அவர்களின் பிகில் மற்றும் லிப்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார் காயத்திரி என்பது குறிப்பிடத்தக்கது. காயத்திரி ஒரு மாடல் அழகி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts