TamilSaaga

ஜோகூர் தொழிற்சாலையில் வெடிவிபத்து : பயத்தில், சிங்கப்பூரில் SCDFஐ அழைத்த சிங்கப்பூரர்கள் – என்ன நடந்தது?

மலேசியாவின் ஜோகூரில் உள்ள பாசிர் குடாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அண்டை நாடான நமது சிங்கப்பூரில் உள்ளவர்கள் பார்க்கும் அளவிற்கு தீயும் புகையும் விண்ணை எட்டியுள்ளது. Taman Pasir Putih காவல் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் CNAவிடம் நேற்று வியாழன் (பிப்ரவரி 24) மதியம் பேசியபோது Tanjung Langsatல் உள்ள Lotte Ube செயற்கை ரப்பர் ஆலையில் ஏற்பட்ட அந்த அதான் தீ தான் பயங்கர “வெடிப்புக்கு” வழிவகுத்தது என்று கூறினார்.

மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி செல்வம் : உடலை சொந்த ஊர் கொண்டுசெல்வதில் சிக்கல்? – 19 நாள் கழித்து மலேசியாவில் நடந்த தகனம்

ஆர்கஸ் மீடியாவின் அறிக்கையின்படி, இந்த ஆலை தென் கொரிய பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பாளர் லோட்டே கெமிக்கல், மலேசியாவின் லோட்டே கெமிக்கல் டைட்டன், ஜப்பானிய நிறுவனமான உபே இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மிட்சுபிஷி ஆகியவற்றிற்கு கூட்டாக சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 8.30 மணி வரை தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெயர் வெளியிட மறுத்த செய்தித் தொடர்பாளர் மேலும் தகவலை தெரிவித்தார்.

பாசிர் குடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்பு நடவடிக்கைகளின் துணைத் தலைவரான திரு இப்ராஹிம் ஓமர், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை கவனிப்பதற்காக தனது குழுவிற்கு மாலை 5.15 மணியளவில் அழைப்பு வந்ததாக CNAவிடம் கூறினார். “வெடிப்பினால் ஏற்பட்ட குப்பைகளால் கைகள் எரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததாக தொழிற்சாலை ஊழியர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்” என்று திரு இப்ராஹிம் கூறினார். மேலும் அந்த இரண்டு தொழிலாளர்களும் பின்னர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“நீதிபதிகள் பாரபட்சமானவர்கள்” : சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ரவி மீது குற்றச்சாட்டு – என்ன சொல்கிறது AGC?

“வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக,” திரு இப்ராஹிம் கூறினார். மாலை 6.45 மணியளவில் CNA அந்த தொழிற்சாலை இருக்கும் பகுதிக்கு வந்தபோது, ​​சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி கரும் புகை காணப்பட்டது. காற்றில் அடர்த்தியான புகையின் வாசனை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பாசிர் குடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையை CNA தொடர்பு கொண்டுள்ளது. சிங்கப்பூரில், பாசிர் ரிஸ் மற்றும் புங்கோலில் இந்த சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts