சிங்கப்பூரில் இன்று புதன் கிழமை (ஜனவரி 19) அதிகாலை இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் Incentiveஐ இழக்கும் தொழிலாளர்கள்” : ஜனாதிபதி ஹலீமாவின் கடும் காட்டமான பதிவு – என்ன நடந்தது?
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் “ஒரு படுக்கை அறையில் தான் இந்த தீ விபத்து துவங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. PAB அல்லது இ-பைக் என அழைக்கப்படும் பவர்-அசிஸ்டட் சைக்கிளின் பேட்டரி பேக்கில் இருந்து தீ ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை காட்டுகிறது. தீ விபத்தின் போது பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாக SCDF வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்ட போது அந்த குடியிருப்பில் ஆறு பேர் இருந்தனர், அவர்கள் அனைவரும் SCDF வருவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் புகையை அதிக அளவில் சுவாசித்ததற்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது. SCDF வருவதற்கு முன்பே அண்டைய யூனிட்களில் இருந்து சுமார் 45 பேர் வெளியேறிவிட்டனர் என்றும் SCDF கூறியது.
தீயணைப்பு கருவிகளை கொண்டு தீ உடனே அணைக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. “SCDF PMD/PBA குறித்த தீ விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்பும் வகையில், அவைகளை நீண்ட நேரம் அல்லது ஒரே இரவில் பேட்டரிகளை சார்ஜ் செய்யக்கூடாது. அசல் அல்லாத பேட்டரிகளை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளது.