சிங்கப்பூரில் ஹோட்டல் 81 அறையில் தங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க யாஸ்லீ ருஸ்டி என்பவர் புகைபிடித்துவிட்டு சிகிரெட் துண்டை மெத்தையின் மேல் வைத்து சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது.
சிகரெட் நெருப்பு காரணமாக மெத்தையில் தீ பரவி விபத்து ஏற்பட்டது. இதனால் புகை மூண்டது. இந்த விபத்தில் சுமார் $7000 அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் விபத்தில் ஏற்பட்ட புகையை சுவாசித்து ஊழியர் ஒருவரும் மற்றொரு விருந்தினர் ஒருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய யாஸ்லீ அவர்கள் மீது தீ விபத்து ஏற்படுத்தியது, போதை பொருள் வைத்திருந்தது மற்றும் பயன்படுத்திய குற்றங்களுக்குக்காக 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.