வீட்டை கட்டிப்பார்.. திருமணம் பண்ணிப்பார்.. என்பார்கள், ஏன் என்றால் இரண்டுமே அவ்வளவு கடினம். திருமணம் என்பது நம் மனித வாழ்வில் நடக்கும் மிகப்பெரிய சந்தோஷமான நிகழ்வு, நம்ம 90s கிட்ஸ் மட்டும் தான் இதற்கு விதிவிலக்கு.
இந்த காலகட்டத்தில் பலருக்கு திருமணம் என்பதே Surprise ஆனா ஒரு விஷயமாக இருக்கையில் சிங்கப்பூரில் 28 வயதான “கெல்லி சுவா” என்ற பெண்மணிக்கு அவரது திருமணத்தில் மிகப்பெரிய Surprise ஒன்று காத்திருந்தது. அவருக்கு எந்தவிதத்திலும் சந்தேகம் வராமல் அந்த பெண்ணின் அண்ணன் தயார் செய்த Surprise அது.
சுவாவின் TikTok கணக்கில் வெளியான வீடியோவில், அவருடைய குடும்பத்தின் முன்னாள் வீட்டுப் பணிப்பெண் அந்த திருமண விழாவில் வந்து கலந்துகொண்டதை கண்டு மணமகள் ஆச்சரியப்பட்ட தருணத்தை பார்க்கமுடிந்தது.
தன் தங்கைக்கு Surprise கொடுக்க அந்த அண்ணன் Philippines நாட்டில் இருந்து அவரை அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Lita அந்த பணிப்பெண் Chua முன் தோன்ற, கண்ணீர் மல்க அவரை ஆரத்தழுவி மகிழ்ந்த காட்சி திருமண விழாவில் குடியிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.
Philippines நாட்டில் Chua பிறப்பதற்கு முன்பிலிருந்தே அவருடைய குடும்பத்தில் Lita பணிப்பெண்ணாக குடும்பத்தில் ஒருவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு Litaவை சந்தித்த Chua, நீங்கள் என் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் தன்னுடைய பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாகவும் தன்னால் வர இயலாது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் Chuaவின் அண்ணன் தங்கைக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து Litaவை அங்கு அழைத்து வந்துள்ளார்.
Lita தனது இரண்டாம் தாய் என்று கூறிய Chua, அவர் எனது திருமணத்திற்கு வந்தது தான் என் திருமணத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய Gift என்று கூறினார். உண்மையில் மனிதநேயம் இன்னும் இறந்துவிடவில்லை என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் சாட்சியாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.