சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த ஒரு குழுவினர், இரவு விடுதிக்குள் நுழைய மறுக்கப்பட்டதை அடுத்து பிரபல Cherry Discotheque’s நுழைவாயிலில் வந்து சண்டையிட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 6, 2022 வெள்ளிக்கிழமை இரவு, Cherry Discotheque’s நுழைவாயியின் வெளியே வரிசையில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு மதர்ஷிப் வாசகர் வெளியிட்ட கருத்துகளின்படி, ஒரு குழுவினருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவத்தன்று இரவு அந்த Discothequeன் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்க மீண்டும் கவுண்டருக்கு வந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். முகநூல் பக்கம் ஒன்றில் வெளியான அந்த சண்டையின் வீடியோக்கள், செர்ரி டிஸ்கோதேக்கின் பாதுகாப்பு மற்றும் கவுண்டர் ஊழியர்களை அந்த ஆண்களின் குழு தாக்குவதைக் காட்டியது.
ரகளையில் ஈடுபட்ட சுமார் எட்டு முதல் 10 பேர் கொண்ட அந்த கும்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு அங்கிருந்து சிதறி ஓடியுள்ளார். கடந்த சில காலமாக சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்க துவங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.